உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலை யெழுபது

51



விஜய தசமி நாட்கோடற் சிறப்பு.

விஜய தசமி நாட்கோடற் சிறப்பென்பது:— வருடந்தோறும் வரும் புரட்டாசிமாத சுக்கிலபட்ச தசமி திதி விரதங்கொள்ளுதலின் பெருமை. அது ஆயுத மெடுத்தல் அல்லது அம்புபோடுந் தினமாதலின், இங்கே பாயிரத்துட் கூறிய ஆயுதங்களை யுடையவராகிய படைத்துணைத் தலைவர் சிறப்பைத் தழுவி வில்வகுப்பிற்கு முதலில் வைத்தார்

கொச்சகம்.


சொன்மங்கலம் பொருந்துந் தொல்லுலகிற் பல்லுயிரும்
நன்மங்கலம் பொருந்து நான்மறையு நனிவிளங்கும்
வன்மங்கலம் பொருந்தி வளர்வனிய குலவரசர்
வின்மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொளினே. (1)

(இ - ள்) தொல் உலகில் - பழமையான உலகத்தில், வன்மம் கலகம் பொருந்தி வளர் வனிய குலஅரசர் - போர்க்கவசத்தை (தங்களுக்கு அலங்காரமாகிய) ஆபரணமாப் பொருந்தி விளங்காநின்ற வன்னியகுல அரசர்களானவர்கள், வில் மங்கலம் பொருந்தும் விறல் தசமி நாள் கொளின்-வில்லுக்குச் சுபகரத்தைப் பொருந்தும் விஜய தசமி நாள் விரதத்தைக் கொண்டால், சொல்மங்கலம் பொருந்தும் - யாவருடைய சொற்களும் நீதியுடையனவாக இருக்கும்; பல் உயிரும் நல்மங்கலம் பொருந்தும் -பலவாகிய உயிர்களும் நல்லசெழிப்பையடையும், நான்மறையும் நனி விளங்கும்-நான்கு வேதங்களும் மிக்க பிரகாசத்தை யடையும். எ - று.

கருத்து வன்னியர்கள் விஜயதசமி நாட்கோடலால் சொற்கள் நீதியும், உயிர்கள செழிப்பும், வேதங்கள் பிரகாசமும் அடையும் என்பதாம்.


விற்சிறப்பு.

விற்சிறப்பென்பது:— வில்லின் பெருமை. அது தகுதியான நாளில் கைக்கொண்டு பழகுதலின், இங்கே விஜய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/63&oldid=1863038" இலிருந்து மீள்விக்கப்பட்டது