உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மூலமும் - உரையும்.

தசமி நாட்கோடற் சிறப்புக்குப் பின்வைத்து நான்கு கவிகளினால் கூறினார்.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

கலையாய் வன்னி குலோத்துங்கர் கரத்திற் கவின்கொண்
டமைந்தவென்றிச், சிலையாலன்றோ வேழ்புயலுஞ் சேணிற் பொலி
யுந் திவாகரனும், அலையார் கடலுங் கடையனனு மடன்மா ருதமு
மடங்கியொரு, நிலையாய் நின்ற மனுநீதி நெறியு நின்ற தறியீரோ. ()

(இ-ள்) குல உத்துங்க வன்னியர் - ஜாதியிலுயர்ந்த வன்னியர்களது, கரத்தில் கலையாய் கவின்கொண்டு அமைந்த-கையினிடத்துக் குல வித்தையாக அழகோடு பொருந்திய, வென்றிச் சிலையால் வெற்றியைத் தரத்தக்க வில்லினால், ஏழ்புயலும் - சத்தமேகங்களும், திவாகரனும்-சூரியனும், சேணில் பொலியும் - ஆகாயத்தில் விளங்குவனவாகும், அலை ஆர்கடலும்-அலைகள் நிறைந்த சமுத்திரமும், கடை அனலும் ஊழித்தீயும், அடல் மாருதமும் - பிரசண்ட காற்றும், ஒருநிலையாய் அடங்கிநின்ற (தத்தம் வரம்பு கடவாது) ஒரு நிலையைப் பற்றினதாகவே அடங்கி நின்றிருக்கின்றன, மனுநீதி நெறியும் நின்ற-மனுதரும வழியும் நின்றிருக்கின்றது, அறியீரோ - அறியீர்களா (எ-று.) அன்று - ஓ - ஓ - அசைகள்.

கருத்து:-வன்னியர்கள் கையில் அமைந்த வில்லினால் சத்த மேகங்களும் சூரியனும் ஆகாயத்திற் பொலிதலும் சமுத்திரமும் வடவனலமும் பிரசண்டக் காற்றும் தத்தம் வரம்பு கடவாது அடங்கி நிற்றலும், மனுமுறை நிலைத்திருக்கின்றதும் ஆம் என்பதாம்.


இதுவும் அது.

வேறு,


மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி மலைமற் றுண்டோ
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக் கலைமற் றுண்டோ
வலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி யலைமற் றுண்டோ
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச் சிலைமற் றுண்டோ.
(3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/64&oldid=1863039" இலிருந்து மீள்விக்கப்பட்டது