உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மூலமும் - உரையும்


மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந் திடுவார்தம்
அடியிரக்கத் தொடுபணிவார்க் கரசுதருங் கொடையாளர்
படிபுரக்க வவதரித்த பண்ணுடர் கரத்தமைவிற்
பிடியுரத்தி னுலன்றோ பெருஞால முரமுறலே. (6)

(இ-ள்.) புலவருக்கு மிடிகரக்க மிகுபொருள் ஈந்திடு வித்வான்களுக்குத் தரித்திரம் நீங்கும்படி மிக்க திரவியத்தைக் கொடுக்கின்றவர்களும், தம் அடிபணிவார்க்கு - தமது பாதத்தில் (வீழ்ந்து) வணங்குவோர்களுக்கு, இரக்கத்தொடும் அரசுதரும் கொடையாளர்- ரக்கத்தோடும் அரசு கொடுக்கும் கொடையினை யுடைய வர்களும் (ஆகிய) - படிபுரக்க அவதரித்த பண்ணாடர் பூவுலகையாளும்படி யவதரித்த தமிழ்நாடரென்னும் சேர சோழ பாண்டிய வன்னியர்களது, கரத்து அமைவிற்பிடி உரத்தினால் அன்றோ - கையினிடம் அமைந்த விற்பிடி யுரத்தினாலல்லவா, பெருஞாலம் உரம் உறல் பெரிய உலகமானது நிலைபெற்றிருத்த (லாகின்றது).

கருத்து. வன்னியர்கள் விற்பிடித்தலால் உலகு நிலை பெற்றிருக்கின்றது என்பதாம்.

இதில் “மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந்திடுவார்” என்பதற்குச் சத்திமுற்றப்புலவர் பாண்டியனது மதுரைக்கு வந்தபொழுது மழையிடரினால் அவ்வழி சென்ற நாரையைப் பார்த்து,

“நாராய் நாராய் செங்கானாராய் - பழம்படுபனையின் கிழங்குபிளந்தன்ன - பவளக்கூர்வாய் செங்கானாராய் நீயு நின்மனைவியும் தென்திசைக் குமரியாடி - வடதிசைக் கேகுவீராயினெம் - மூர்ச்சத்தி முற்றவாவியுட்டங்கி - நனை சுவர்க்கூரைகனை குரற்பல்லி-பாடுபார்த்திருக்குமெம் மனைவியைக்கண்டு - எங்கோன்மாறன் வழுதி கூடலில் - ஆடையின்றி வாடையின் மெலிந்து - கையது கொண்டு மெய்யது பொத்திக் காலதுகொண்டு மேலது தழீஇப் - பேழையுள்ளிருக்கும் பாம்பென வுயிர்க்கு - மேழை யாளனைக் கண்டனமெனுமே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/68&oldid=1863045" இலிருந்து மீள்விக்கப்பட்டது