சிலை யெழுபது
57
என்னும் பாடலைக் கேட்டு நகரிசோதனையாக வந்த பாண்டியன் அருள் புரிந்ததைக் காண்க.
அன்றியும், சேரமான் பெருமாள் பாணபத்திரனுக்கு “மதிமலி புரிசை மாடக் கூடற் - பதிமிசை நிலவு பானிற வரிச்சிற் - கன்னம் பயிற்பொழி லாலவாயின் மன்னிய சிவன்யான் மொழிந்திடு மாற்றம் - பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்- கொருமையினுரிமையி னுதவி யணிதிகழ் - குருமா மணிதிகழ் குலவிய குடைக் கீழ்ச் - செருமாவுகைக்குஞ் சேரலன் காண்க - பண்பால் யாழ்பயில் பாணபத்திரன் - றன்கோலென்பா லன்பனறன் பாற் - காண்பது கருதிப் போந்தனன் - மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.”
என மதுரை சோமசுந்தரக்கடவுள் எழுதிக் கொடுத்தனுப்பிய திருமுகத்தைக்! கண்டு கொடுத்த சரித்திரத்தைப் பெரியபுராணம் திருவிளையாடல்களிற் காண்க. “தம் அடி இரக்கத்தோடும் பணிவார்க்கு அரசுதரும கொடையாளர்” என்பதற்கு இராமன் தம்மையடைந்தவர்களாகிய விபீஷணன், சுக்ரீவன் முதலியோர்களுக்குப பட்டாபிஷேகஞ் செய்திருப்பதால் - அச்சரிதங்களை இராமாயணதிற் காண்க, “படிபுரக்க அவதரித்த பண்ணாடர்” என்னால் அரசர்கள் உலகத்தைக் காக்கவேண்டியதற்கு ஏற்படுத்தப்பட்டார்கள் என்பதை - மனுஸ்மிருதி எ-வது அத்தியாயம் இராஜதருமம “வேதத்திற் சொல்லிய உப நயன முதலான சமஸ்காரங்கள் செய்துகொண்டவனா யிருக்கிற க்ஷத்திரியனாலே இவ்வுலகம் விதிப்படி காப்பாற்றத் தக்கதென்று ௨-வது சுலோகத்தானும், “உலகத்தில் அரசனில்லாமற் போனால் பலமில்லாதவர்கள் பயத்தினா லழிந்துபோவார்கள் ஆகையினால் இவ்வுலக மெல்லாம் அழியாமலிருக்கும் பொருட்டுச் சுவாமியானவர் அரசனை யுண்டு பண்ணினார்” என்னும் ௩-வது சுலோகத்தானும் உணர்க. பண்ணாடரென்றது தமிழ் நாடர். பண் இசை. இது இயல் இசை நாடகம் என்னும் தமிழின் பகுதி மூன்றனுளொன்று “கிளந்த வல்ல வேறுபிற