சிலை யெழுபது
65
வெள்கி தாள் வணங்கும் எழில் மிக்கோர் - தன்னிடத்து மன்மதனும் நாணிப் பாதத்தில் வணங்கும்படி அழகில் மிகுந்தவர்களும், தனு அணங்கு எவர்க்கும் அகல தாய் போல நன்று ஆற்றுவன்யர் - யாவர்க்குஞ் சிறுமை நோயகல தாய்போல (அருள் வைத்து) மனுநெறி முறை யாகக் காவல் செய்கின்றவர்களுமாகிய வன்னியர்களது, தனுவணங்க - வில்லானது வளைய, தரியலர்கள் தஞ்சம் என வணங்காரோ பகைவர்கள் (எதிரில் வந்து எங்களை சம்மரிப்பது) எளிது (கோபித்து வில்லைவளைக்காதீர்கள்) என வணங்கமாட்டார்களோ? (எ-று.)
கருத்து. வன்னியர்கள் வில்வளையப் பகைவர்கள் தஞ்சம் என வணங்குவார்கள் என்பதாம்.
இக்ஷ்வாகு வம்சத்தில் விஷ்ணுவே இராமனாகவும், புரூரவர் வம்சத்தில் கிருஷ்ணனாகவும், பலராமனாகவும், மதுரைப் பாண்டியன் வம்சத்தில் தடாதகைப் பிராட்டியாராகப் பார்வதியும், சிவபெருமான் சௌந்தரபாண்டியனாகவும், சுப்ரமண்யர் உக்ர குமார பாண்டியனாகவும், அக்கினி உருத்திரவன்னிய மகாராஜனாகவும் போந்த சரித்திரங்களாலு முணர்க.
தன் + உவண்—தனுவண். என்றது தொகுத்தல் விகாரம்.
நாணேற்றுதற் சிறப்பு.
நாணேற்றுதற் சிறப்பென்பது:—நாணியை வில்லினிடத்துப் பூட்டுதலின் பெருமை. அது வில்லை வளைத்த பிறகே யாதலின், இங்கே வில் வளைத்தற் சிறப்புக்குப் பின் வைத்துக்கூறினார்.
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.
ஓங்குபுகழ் வன்னிமன்ன ரொன்னலார்த மைப்புறங்கண் டுலகங் காக்கத், தாங்குவரிச் சிலைவணக்கிச் சரோருகக்கை யாற்றீண்டித் தனிநாண் பூட்டப், பாங்குறுமூ வுலகினரும் பைங்கழைத்தோண் மட நல்லார் பசும்பொன் வண்ணப், பூங்கமுகின் மங்கலநாண் பூட்டுதல் போன் மெய்ப்புளகம் போர்ப்பர் மன்னே. (15)
5