உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிலை எழுபது, 1947.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மூலமும் - உரையும்

டிம்பரா ருஞ்சொல்வன்ய ரேலாருக் கிடரிழைக்கு
மம்பறாத் தூணியுண்டே லாவியங்கத் தெவர்க்குமுண்டே. (17)

(இ - ள்.) இம்பர் யாருஞ்சொல் வன்னியர் - இவ்வுலகத்தில் யாவரும் சொல்லுகின்ற வன்னியர்களது, ஏலாருக்கு இடர் இழைக்கும் அம்பு அறாத்தூணி உண்டேல் - பகைவர்களுக்குத் துன்பத்தைச் செய்யும் அம்பறாத்தூணியிருக்குமே யானால், அவ் அமரர் யாம் உம்பர் என்று இறுமாந்து உறைவது - அத்தேவர்கள் நாம் உயர்ந்த பதவியையுடையேம் என்று எண்ணிக் கருவித்திருப்பதுண்டு; யாம் கம்பர் என்றேத்தக் கவியரசாய் வாழ்வது முண்டு -யாமும் கம்பர் என்று யாவரும் புகழக் கவிராஜனாக வாழ்வதும் உண்டு; எவர்க்கும் ஆவி அங்கத்து உண்டு - (இவையன்றி மற்றையோர்) யாவர்க்கும் உயிர் அங்கத்தினிடத்து உண்டு. எ - று ஆம் ஏ - அசைகள்.

கருத்து. வன்னியர்களது அம்பறாத்தூணி யிருப்பதால் தேவர்கள் செருக்கியிருப்பதும், யாம் கம்பரென உலகப் பிரசித்த கவிராஜனாக விருப்பதும் ஆன்மகோடிகள் உயிரோடிருப்பதும் உண்டு என்பதாம்.

இதில் இராக்ஷதர்கள் அடியோடுங் கெட்டதால் "உம்பர் யாமென்றிறுமாந் துறைவதுண்டவ் வமரர்கள்" என்றும் தமிழ் வேந்தர் மூவராலும் நிலம் யானை குதிரை தண்டிகை முதலியவை கொடுத்து அனுசரித்ததோடும் தமக்குக் கொடுத்த யானை குதிரைகள் பயிர்களை யழித்துவிடும் நிலங்களுக்கு வரி நீக்கிக் கொடுத்தலையும் மறவே மென்பார் "யாம் கம்பராமென்றேத்தக் கவியரசராய் வாழ்வதுண்டு" என்றும் கூறினாரென்க.


பிரமாத்திரச்சிறப்பு.

பிரமாத்திரச் சிறப்பென்பது :—பிரமாவினிடத்துப் பெறும் அத்திரத்தின் பெருமை. அது அம்பறாத்தூணிக்குள் இனத்தோடு தங்குதலின், இங்கே அம்பறாத்தூணிச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலை_எழுபது,_1947.pdf/80&oldid=1862693" இலிருந்து மீள்விக்கப்பட்டது