சிலை யெழுபது
75
வாளோடு வேல் இன மாதலின் இங்கே வீரவாட் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
செய்யகத்து வளநாடு தேர்புலவர்க் கினிதளிப்பார்
மெய்யகத்து வன்னியர்செவ் வேள்பலவா முருக்கொளல்போல்
கையகத்து வேலேந்து காலாளின் படையினன்றி
வையகத்து மருவுகலி மற்றொன்றா லகலாவே.
(24)
(இ - ள்.) செய் அகத்து வளநாடு தேர்-வயல்வளத்தைக்கொண்ட நாடு தேர் முதலியவைகளையும், புலவர்க்கு. இனிது அளிப்பார் வன்னியர்-தம்மை யடைந்த வித்வான்களுக்கு இனிமையோடுங் கொடுக்கின்றவர்களாகிய வன்னியரென்னும் அரசர்களது, செவ்வேள் மெய் அகத்து பல ஆம் உருகொளல்போல் - ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் தமது சரீரத்தினிடத்தினின்றும் (அவ்வுருவாகப்) பல உருவங்கள் கொண்டு வருதல் போல், (வருகின்ற) வேல் ஏந்து காலாளின் படையின் அன்றி - வேல் ஏந்திய காலாளின் படையினாலல்லது, வையகத்து மருவு கலி மற்று ஒன்றால் அகலா - இவ்வுலகத்துப் பொருந்தும் அதருமமானது. வேறு ஒருவழியினாலும் நீங்காது, எ-று.
கருத்து வன்னியர்களது காலாளின் படைகளினால் உலகத்திலுண்டாகும் அதருமம் நீங்கி வருகின்றது என்பதாம்.
“செய்யகத்துவள நாடு தேர் புலவர்க் கினிதளிப்பார்” என்றதற்கு - மதுரையில் குலசேகர பாண்டியன் அரசு புரிந்த காலத்து௸. பாண்டியன் தன்மேல் பாமாலை தொடுத்துவந்த இடைக்காடனை அவமதித்த காரணதால் சோமசுந்தரக்கடவுள் வருத்தமடையக் கண்ட பாண்டியன் ஷ காடனை வருவித்து மிக்க மரியாதையோடும் பாமாலை கேட்டு “அறிவுடைக் காடனுக்கு மருமை மாண் புலமை யோர்க்கும், முறைமையா லாரந்தூசு முகிழ்முலைக் கொடியினன்னார், நிறை நிதி வேழம்பாய்மான் விளைநில நிரம்ப நல்கி, யறைகழற் காலிற் பின்னே முடி நடந்திதனை வேண்டும்”