84
மூலமும் - உரையும்
கும்பல இரத்தினங்களைப் பதிக்கப் பெற்றிருக்கிற, மண்டபத்தில் வீற்றிருக்கை - அரசாட்சி மண்டபத்தில் கொலு வீற்றிருத்தலானது, மண்டபம் பெற்றிடுபேறு - அம்மண்டபம் பெற்ற தவப்பய னாகும். எ-று.
கருத்து. வன்னியர்கள் அரசாட்சி மண்டபத்துள் கொலுவீற்றிருக்கைக்கு அம்மண்டபம் தவஞ்செய்திருத்தல் வேண்டும் என்பதாம்.
சிங்காதனத்திருத்தற்சிறப்பு
சிங்காதனத்திருத்தற் சிறப்பென்பது:— சிங்காதனத்திற் றங்குதலின் பெருமை. அது அரசாட்சி மண்டபத்துள் தங்குதலின் இங்கே அரசாட்சி மண்டபச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
தங்காத னன்பனிறை யென்ன மாதர் சந்ததமுந் தொழுதெழு
வார் சலியா தாகம், தங்காத னனையநட்பிற் சிறந்தே யாவுந் தகுபு
லியு மோர்துறையிற் றண்ணீர் மாந்தும், சிங்காத னம்பசும்பொன்
மணிதூ சாதி தெளிவுறுவே தியர்க்குதவும் வன்னி மன்னர், சிங்காத
னத்தின்மிசை யமர்ந்து நாளுந் திகழரசு செயுங்கருணைச் செயலா
லன்றோ.
(33)
(இ-ள்) தெளிவு உறு வேதியர்க்கு (பிரமநிஷ்டையில்) தெளிந்த பிராமணர்களுக்கு, சிங்காது-குறையாது. அனம் பசும் பொன் மணிதூசு ஆதி உதவும் வன்னிமன்னர் - அன்னம் பொன் இரத்தினம் ஆடை முதலியவைகளைக் கொடுக்கின்ற வன்னிய அரசர்கள், நாளும் சிங்காதனத்தின்மிசை அமர்ந்து திகழ் அரசு செயும் கருணைச் செயலால் என்றும் சிங்காதனத்தின் மேலமர்ந்து விளங்க அரசுநடத்துகின்ற அருட் செய்கையால், மாதர் அன்பன் தம் காதன் இறை என்ன - மகளிர்கள் அன்புக்குரியனாகிய தமது நாயகனைத் தெய்வமென நினைத்து, சந்ததமும் தொழுது எழுவார் - எப்பொழுதும் வணங்கி யெழுவார்கள், ஆவும் புலியும் - பசுவும் புலியும், ஆகம் சலியாது