பக்கம்:சிவஞானம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சி வ ஞ | ண ம்

"ஆதலால், சிறுவர்களே, நீங்கள் கற்றல் கேட்ட லோடு அமையாது சிந்திக்கவும் முயலுங்கள். அவ்வாறு சிந்தை செய்தலுக்குச் சாதகமாக இன்று நான் உங்க ளுக்கு ஒரு வேலை தருகின்றேன். அஃதென்னையெனில் நான் சென்ற வாரம், உங்களுக்கு உயிர்களிடத்து அன்பு என்பது குறித்து ஒருவாறு விளக்கியிருக்கின் றேன். அல்லவா? அவ்விதம் நீங்களும் ஏதேனும் ஒரு பிராணியின் நிலைமையைக்குறித்து, நான் எழுதியிருப் பதுபோல் ஓர் உரையாடல் எழுதிக் காட்டுதலேயாகும். உங்களில் எவன் எழுதும் உரையாடல் மிகவும் சிறந் திருக்கின்றதோ அவனுக்குத் தக்க பரிசில் அளிக்கப் படும். ஆதலால் ஒவ்வொருவரும் அப்பரிசிலைப் பெறு தற்கு முந்துதலோடு அன்பென்னும் அழியாச் செல் வத்தை ஓம்பி வளர்க்கும் வழியினையும் தேடுங்கள்,' என்று முறுவலோடு மொழிந்தனர்.

பரிசுப் போட்டி

சிறிது நேரத்திற்குள் அச்சிறுவர்களுக்கு எழுது

கோலும், தாள்களும் கொடுக்கப்பட்டன. பின்னர், அவர்கள், எவ்வாறு ஆரம்பிப்பது? எவ்வாறு முடிப் பது ? என்று எண்ணியெண்ணி யேங்கலாயினர். அப் போது, நாய்க்குட்டிச் சுவாமியார், அவர்களை நோக்கி, * சிறுவர்களே, ஏன் விழிக்கின்றீர்கள் ? நீரில் விழுந் தன்ருே நீந்துதல் வேண்டும் ? எழுதிப் பாருங்கள் ; யாவும் இயலும். சிறுவர்களாகிய நாம் எவ்வாறு எழுதப் போகின்ருேம் !" என்று எண்ணித் தயங்குதல் வேண்டாம். அறிவு எல்லோர்க்கும் பொது. ஆய்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/105&oldid=563137" இலிருந்து மீள்விக்கப்பட்டது