பக்கம்:சிவஞானம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சி வ ஞ ா ன ம்

இவைகளுள் சிவஞானம் எழுதிய ஆடும் அதன் குட்டியும்’ என்பது பொருட் பொருத்தத்திலுைம், உரை நடையிலுைம் பெரிதும் சிறந்திருந்தது. ஆதலின், அவனே அவர்களில் முதன்மையாக நின்ருன் மணி வண்ணன் எழுதிய சிற்றெறும்பின் துயரம் என்பது ஒருவாறு போற்றக் கூடியதாகவே யிருந்தது. மற்றை யோர் எழுதிய உரையாடல்கள் உரை நடையில் சிறந் திராவிடினும் படித்தற்கு இன்பத்தையே விளைவித்தன.

குப்புசாமிப் பிள்ளை இவைகளைப் படித்து முடிந்த தும் 'நாய்க்குட்டிச்சுவாமியார், நன்று ! நன்று பிள்ளை யவர்களே ! நம் சிவஞானம் எல்லோரினும் மிக்க நன்ருகவே எழுதியிருக்கின்ருன் : ஒரு சிறுவன் இவ்வளவு எழுதுவது மிகவும் கடினமே. - தம்பி, சிவஞானம், அருகே வா ; நீ இவ்வளவு அழகாகவும், தெளிவாகவும் எழுதுவாய் என்று நான் இதுவரை எண்ணவேயில்லை. அப்பா, நீ மேலும் மேலும் கற்க முயல்வாயாக கற்றவை போதும் என்று எக்காலத் தும் எண்ணுதல் வேண்டாம் ; கல்வி கரையில’, என்பதை என்றும் கருத்தில் வை," எனக் கூறினர்.

சிவஞானம் அப்போது தலை குனிந்த வண்ணம் ஒன்றும் பேசாமல் நாணி நின்ருன். பின்னர், மணி வண்ணன் என்பவன் குப்புசாமிப் பிள்ளையை நோக்கி, " தாத்தா, நம் சுவாமியார் கூறியபடி சிவஞானம் எழுதி யுள்ளதே எல்லோரினும் சிறந்திருக்கின்றது. ஆதலால், பரிசில் பெறத் தக்கவன் அவனே ; இதில் சிறிதும் சந்தேகமில்லை ?' என்ருன்.

இதைக் கேட்டதும் பிற சிறுவர்கள், " ஆம் ; தாத்தா, அவனுக்கே பரிசில் அளிக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/107&oldid=563139" இலிருந்து மீள்விக்கப்பட்டது