பக்கம்:சிவஞானம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H சி வ ஞ | ன ம்

ஒன்றுந் தோன்றப் பெருது, அழுது கொண்டே என் அன்னையின் அடிவயிற்றில் முட்டுவேன். அப் போது, என் தாய் எனக்குப் பல தேறுதல்கள் கூறித் தன் மெல்லிய நாவில்ை என்னை அன் போடு தடவிக் கொடுப்பாள்.

குதிரைக் குட்டி - (துயரத்துடன்) ஐயோ பாவம் ! இதைக் கேட்க எனக்கு மிக்க வருத்தமாய் இருக் கிறது. ஓ கன்றே, அதன் பின்னராவது அவன் சிறிது நேரம் உன்னைப் பால் உண்ண விடு கின்ருனு ?

யசுவின் கன்று-(ஆராமையுடன்) அந்தோ அந்த அநியாயத்தை ஏன் கேட்கின்ருய் ?-இவ்விதம் பாலைக் கறந்து கொண்டதும், என் எசமானன். என்னைக் கட்டினின்றும் அவிழ்த்து விடுவான். நான் அப்போதாவது, மிகுந்துள்ள பாலில் சிறிது அருந்தலாம்”, என்று அருகே செல்வேன். சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், என் எசமானன் இரண்டு பெரிய தகரப் பாத்திரங்களைக் கையில்

பிடித்துக்கொண்டு, என் அன்னையைத் தெரு விற்கு ஒட்டிச் செல்வான். அப்போது நான், பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/15&oldid=563047" இலிருந்து மீள்விக்கப்பட்டது