பக்கம்:சிவஞானம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சி வ ஞ ண ன ம்

குட்டி-(மனக்களிப்போடு) ஆ | ஆ !-என்ன இன்ப

மான இடம் !-அம்மா, அந்த வனம் இப்போதும் இருக்கின்றதா ? அவ்விடத்தில் நம் இனத்தவரில் யாரேனும் இன்னமும் இருந்து வருகின்றனரா ?

குதிரை-அதில் என்ன சந்தேகம் ? அத்தகைய வனங் கள் பல இப்போதும் இருக்கின்றன ; நம் இனத் தவரும் சிலர் அவ்விடங்களில் இன்புற்று வாழ்ந்து வருகின்றனர்.-என் செல்வமே, அதை நீ ஏன் கேட்கின்ருய் ?

குட்டி -(ஆச்சரியத்துடன்) என்ன அம்மா ? அப்படிச் சொல்லுகின்றீர்கள் ! நாம் ஏன் அங்குச் செல்லு தல் கூடாது ? அம்மண்ரீ, தங்களுக்குச் செல்லும் வழி தெரியுமோ ? தெரிந்தால் இப்போதே புறப் படுங்கள் ; நாம் அவ்விடத்தே சென்று இன்பமாய் வாழலாம்.

குதிரை - (ஏக்கத்துடன்) அந்தோ! குழந்தாய், நீ யாதும் உணராமல் உரைக்கின்ருய். நாம், நம் இச்சை யாய் எங்கும் அடி எடுத்து வைத்தல் கூடாது. மானிடர்கள் நம்மை வழியடிமை கொண்டிருக்கின் றனர். அவ்வடிமைத் தன்மையினின்றும் நீங்க நம்மால் சிறிதும் இயலாது.

குட்டி- (திகைத்து) ஏன் இயலாது ? இஃது என்ன ஆச்சரியம் ! நாம் என் அம்மா அவர்கட்கு அடி மைப்பட வேண்டும் ?

குதிரை-என் கண்மணி, அதனை யானும் அறிந்தி லேன். அது இறைவன் இட்ட சாபம் ; நம் இனத் தவர் செய்த பாவம். இவ்வளவே எனக்குத் தெரியும்-(ஆராமையுடன்) என் செல்வமே, நி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/23&oldid=563055" இலிருந்து மீள்விக்கப்பட்டது