பக்கம்:சிவஞானம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிட த்து அன்பு |

o வார்கள் ஏதேதோ நான் பார்த்திராத பொரு. களை யெல்லாம் என்னிடம் கொண்டுவந்து காட்டி என்னை மருளச் செய்வார்கள்-என் வா%

வயிற்றில் ஓங்கி யிடிப்பார்கள்-கைகொட்டி நகைப்பார்கள். இன் வாறு புரிதலையே அச்சிறுவர்கள் பெருவிளையாட் டாக எண்ணியிருந்தார்கள். குட்டி-அம்மா, நாமும் அவர்களைப்போல் உயிருள்ளவர் கள் அல்லவா! நமக்குத் துன்பம் செய்தால் நாம் வருந்துவோம் என்பதை அச்சிறுவர்கள் அப் போது உணரவில்லையா ? குதிரை-ஐயோ அவர்கள் அதனைச் சிறிதும் கருதி ஞர்களில்லை ; தங்கள் விளையாட்டினையே பெரிதாக நினைத்தார்கள். குழந்தாய், அச்சிறுவர்கள் எனக்குத் தீமை புரியுங் காலத்து, நான் அச்சத்தால், அவர்கள் கைக்குப் பிடிபடாமல், மிக்க வேகமாய் ஒடுவேன். அதனுல், அவர்கள் எனக்குப் பந்தயக்குதிரை என்று பெயர் வைத்தார்கள். சிறுவர்கள் இட்ட பெயர் எனக்கு

நிலைத்து நின்றுவிட்டது. என் ஓட்டத்தைப் பிடிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/26&oldid=563058" இலிருந்து மீள்விக்கப்பட்டது