பக்கம்:சிவஞானம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவகு ன ம்

ஒருவராலும் இயலாது என்று எல்லோரும் இயம்ப லாயினர். இதனைக் கேள்வியுற்ற ஒரு குதிரைப் பந் தயக்காரன் என்னை மிக்க விலை கொடுத்து வாங்கிக் கொண்டான். அவளுே ஒரு முரட்டு மனிதன். அவன் இன்பங் கொண்டகாலத்து என்னைச் சிராட் டிப் பாராட்டுவான் ; தான் விரும்பிய பண்டங்களை யெல்லாம் எனக்கு வாங்கித் தருவான் ; என் கழுத் தில் பல ஆபரணங்களை அணிவான் ; பூமாலைகள் வாங்கிப் புனை வான். ஆனல், அவன், கோபங் கொண்ட காலத்தோ. என்னைக் கொடுமையாய்த் தண்டிப்பான். அப்போது அவன் கையிலிருப்பது யாதாயிருப்பினும் கருதான் ; அதனைக் கொண்டு என்னை ஓங்கிப் புடைப்பான். இத்தகைய மூர்க்க எசமானன் எனக்குக் கிடைத்தான்.

என் கண்ணே, அவன் ஒரு சிறு வண்டி வைத்திருந்

தான். அது ஒரு நூதனமான வண்டி. அதற்கு மேல் மூடி கிடையாது. அவ்வண்டியின் இருசக் கரங்களுக்கிடையே ஒரு சிறு பீடம் உயரமாக அமைக்கப்பட்டிருக்கும். அதன்மீது ஒருவருக்கு மேல் உட்கார வியலாது. அவ்வண்டி மிகவுடி இலேசானது. அதை இரேக்கலா என்று அழைக் கின்ருர்கள். என் எசமானன் என்னை அவ்வண்டி யில் அடிக்கடி கட்டியோட்டுவான். முதலில் அவன் என்னை அதில் பூட்டும்போது நான் மிகவும் மருட்சி யடைந்து துள்ளித் துள்ளிக் குதித்தேன் அப்பொழுது அவன் கோபங் கொண்டு தன் கைய லிருந்த சவுக் என்னும் சாட்டையில்ை என் முது கில் பளிர்-பளிர்' என்று அடித்து விட்டான். அ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/27&oldid=563059" இலிருந்து மீள்விக்கப்பட்டது