பக்கம்:சிவஞானம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

சிவ ஞ | ன ம்

மான் போல் தாவி யோடின. நான் நோயின் மிகுதி யால் ஓட்டத்தில் சிறிது பின் வாங்கினேன். அது கண்ட எசமானன் என்மீது மிகுதியும் கோபங் கொண்டான். நான் வீனில் முரட்டுத்தனம் செய்கின்றேன் என்று அவன் எண்ணி விட்டான். அவன் என் வயிற்றின்மீதும் கால்களின் மீதும் கொடுத்த அடிகளுக்கோ கணக்கே யில்லை. அக் கொடியவன் என்னை க்கொன்று போட்டுவிட்டான். பளிர்-பளிர் ' என்னும் சாட்டையின் சப்தம் என்னை அலறச் செய்தது. அந்தோ அவன் பின்னும் செய்த கொடுமைகளை நான் என்னென் றியம்புவேன் ! அச்சண்டாளன் தன் சாட்டையின் பின்புறத்தில் ஒரு நீண்ட இருப்பூசியைச் செருகி வைத்திருந்தான். அதைக் கொண்டு அப்பாதகன் என் முதுகின் பின்புறத்தில் பன்முறை குத்தின்ை. -என் செல்மே,நான் அப்போது என்ன பாடுபட் டிருப்பேன் என்பதை நீயே எண்ணிப்பார். நான் "அந்தோ -அந்தோ ! என அலறினேன் : "ஈசா !-ஈசா ! எனப் பன்முறை இறைவனை வேண்டினேன் , துன்பத்தால் துணுக்குற்றுக் குதித்தேன் ; உறுமி நிலத்தைப் பலமுறை உதைத்தேன். ; என் கழுத்தை நெளித்துச் கனைத்து மேலெழும்பிக் குதித்தேன். நான் அவ்வாறு புரிந்ததல்ை அவ்வண்டியில் இருந்த என் எசமானன் தன் பந்தயத்தை யிழந்து பூமி யில் குப்புறக் கவிழ்ந்தான். அருகே நின்றிருந்த சனங்கள் அவனைப் பரிகசித்துக் கைகொட்டி நகைத்தனர். நான் நெடுந்துாரம் ஓடிப் பிறகு, ஓ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/29&oldid=563061" இலிருந்து மீள்விக்கப்பட்டது