பக்கம்:சிவஞானம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 33

இழந்தாய், நான் ஒரு நாள், காலை முழுவதும் கடுமை யாய் உழைத்து, இரவு எட்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். என் எசமானன் என்னைக் கட்டி னின்றும் அவிழ்த்து நெடுநேரமாகவில்லை. அதற் குள் வானம் இருண்டுவிட்டது , மின்னலும் இடி யும் மாறி மாறித் தோன்றின. சிறிது நேரத்திற் கெல்லாம் காற்றும் மழையும் கலந்தடிக்கத் தலைப் பட்டன. நான் அச்சமயம் களைத்துக் கால் வலியி ல்ை துன்புற்றிருந்தேன். அன்றியும், நான் அப் போது பூரண கருப்பமுற்று இருந்தமையால், வயிற்று வலியும் என்னை ஒரு புறம் வாட்டத் தொடங்கியது. என்னைக் கட்டியிருந்த கொட்டகை யோ கூறுந் தரமன்று. சொட்டு-சொட்டு ' என்று விழும் மழைத்துளிகளால் அவ்விடம் முற்றிலும் நனைந்திருந்தது. என் அருகே நீரும் சேறும் நிரம்பி யிருந்தன. என்னுல் நிற்கவும் இயல வில்லை; கீழே படுக்கவும் கூடவில்லை. அப்போது நான், ஐயோ ! இனியேனும் சிறிது காலாறலாம் என்று எண்ணினேனே கொடிய வயிற்று நோயோடு இந்தப் பாழும் மழையும் எனக்குப் பகையாய் முடிந்ததே !-ஈசா நான் இவ்விரவை எவ்வாறு கழிப்பேன், என்று பலவாறு எண்ணி யெண்ணி யேங்கிப், பின் என் அருகே இருந்த புல் லில் சிறிது அப்போதுதான் தின்ன ஆரம்பித் தேன்.-ஆ நான் என்னென்று சொல்லுவேன் ! அதே சமயத்தில், என் எசமானகிைய அப்படு பாவி, இரண்டு கொழுத்த ஆட்களை அழைத்துக் கொண்டு என் அருகே வந்தான். அப்போது

சி. - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/40&oldid=563072" இலிருந்து மீள்விக்கப்பட்டது