பக்கம்:சிவஞானம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 41

பொருட்டு மெதுவாக அவ்வழியே வந்துகொண் டிருந்தான். அவன் அருகே வந்ததும், நானும், என் அருமைக் குழந்தையாகிய நீயும் அவ்வால மரத்தின் அடியில் அமர்ந்திருத்தலைக் கண்டு அதிசயித்தான்.

குட்டி- ஆச்சரியத்துட ன் அம்மணி, நான் அப்போதா பிறந்தேன் ! அது எனக்குச் சிறிதும் நினைவில் இல்லை அம்மா !

குதிரை-ஆம்; கண்மணி, நீ சிறு குழந்தையாய் இருந்ததால் அஃது உனக்கு நினைவிராது. என் செல்வமே, என் நல்ல காலம்-அச்சமயம் அவன் என்னைச் சிறிதும் துன்புறுத்த வில்லை. சிறு குழந் தையாகிய உன்னை அவன் தன் தோளின்மீது வைத்துத் துரக்கிக் கொண்டு வந்தான். நான் அவன் பின்னல் நடந்து வந்தேன். இவ்விதம் நாம் வீடு வந்து சேர்ந்ததும் நம் எசமானனுக்குச் சுரநோய் கண்டுவிட்டது. நான் அன்று முழுதும் ஓய்வாகவே யிருந்தேன். நம் எசமான னுக்கு மேலும் மேலும் அச்சுரநோய் அதிகரிக்கத் தலைப் பட்டது. ஆதலால், நான் சில நாட்கள் வரை ஓய்வாக இருக்கவேண்டி வரும் என்று எண்ணி னேன். ஆனால், என்னை அவ்வாறு விட்டுவைக்க அக்கொடியோனுக்கு எண்ணமில்லை. உ ைந்து கிடந்த அவ்வண்டியை அவன் எவ்விதமோ ஒர் ஆளைக்கொண்டு அன்றை மறுநாளே சரிப்படுத்தி விட்டான். அடுத்த நாள் அப்பாவி, நான் இஃாக் திருத்தலையும் கருதாது என்னை ஒரு கூ லியா ள னுக்கு ஒப்பித்துவிட்டான். அவனே) கொடியவன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/48&oldid=563080" இலிருந்து மீள்விக்கப்பட்டது