பக்கம்:சிவஞானம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சி வ ஞா ன ம்

கொடியவன்! அவனிடம் நான் பட்ட துன்பங்கள் எண்ணுதற் கரியன.

என் கண்ணே, அன்று காலை, கூலியாளயை அக் கொடியோன் என்னை வண்டியில் பூட்டுதற்கு ஆரம் பித்தான். அப்போது, சிறு குழந்தையாய நீ மிக்க அவாவுடன் பால் உண்ண ஓடி வந்தாய். அது கண்ட அக்கொடும்பாவி உன்னைக் குழந்தையென் றும் கருதாது உன் காதைப் பிடித்து இழுத்து, உன்னைக் காலால் உதைத்து நிலத்தில் தள்ளி ன்ை. அந்தோ! அப்போது நீ எழுந்திருக்கவும் இயலாது அவ்விடத்திலேயே அழுத வண்ணம் கிடந்தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/49&oldid=563081" இலிருந்து மீள்விக்கப்பட்டது