பக்கம்:சிவஞானம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 47

L}^l) இடங்களில் காயம் காணப்பட்டது. அவன் அதனுேடு அவ்விடத்தை விட்டு அகன்ருன். நம் எசமான னும் தன் வீடு போய்ச் சேர்ந்தான்.

என் செல்வமே, இரண்டொரு நாளில் நம் எசமான னுக்குத் தேகம் குணமடைந்துவிட்டது. நானே என் முன்னங் கால்களில் நேர்ந்த காயத்தால் அப்போது மிகுதியும் துன்புற்றிருந்தேன் இரவும் பகலும் எனக்கு உறக்கம் என்பதே இல்லாதிருந் தது. இதை அக் கொடும்பாவி சிறிதும் கருதினு னில்லை. இந்நிலையிலும் அவன் என் மூலமாகப் பொருள் சம்பாதிக்க வேண்டும் என்றே எண்ணங் கொண்டான். ஆதலால், அக்கொடியவன் என்னே அன்று இரவு எட்டு மணிக்குமேல் வண்டியில் பூட்டி வீதிவழியே ஒட்டிச் சென்ருன். அப்போது, புகைவண்டி ஏறி வெளியூர்க்குச் செல்லவேண்டி, கனத்த சாமான்களோடும், இரு கைக்குழந்தை களோடும், ஆண்களும் பெண்களுமாக ஐந்துபேர் வந்து அவ்வண்டியில் ஏறினர். இவ்வளவு பாரத் தினையும் ஏற்றிச் செல்லுதற்கு முதலில் இவன் சிறிது மனந் தயங்கின்ை. ஆல்ை, அவர்கள் பொருள் மிகுதியாய்க் கொடுக்கச் சம்மதிக்கவே இந்தப் படுபாவி அவர்களை ஆனந்தத்துடன் ஏற்றிக்கொண்டு என்னை அடித்தடித்து ஒட்ட ஆரம்பித்தான். நான், நோயின் துன்பம் பொறுக்க லாற்ருது, கண்ணிர் வடித்தவண்ணம் இறைவனை வேண்டிக் கொண்டே மெதுவாக நொண்டி

நடந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/54&oldid=563086" இலிருந்து மீள்விக்கப்பட்டது