பக்கம்:சிவஞானம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 49

குட்டி-அம்மா, அந்தப் பைரி என்பவர் யார் ? அவர்

ஏன் அவ்வாறு செய்தல் வேண்டும் ?

குதிரை- கண்மணி, இந்த வண்டிக்காரர்கள் நம்மைத் துன்புறுத்துவதைக் கண்டு இரக்கங் கொண்ட அரசாங்கத்தார் சில அலுவலாளர்களை ஏற்படுத்தி யிருக்கிருர்கள். அவர்களை மக்கள் பைரி என்று அழைக்கின்ருர்கள். எந்த வண்டிக் காரனேனும் நம்மை வருத்தினுலும், நான்கு பேர்களுக்குமேல் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்ருலும், நாம் நோயாய் இருக்குங் காலத்து நம்மை வண்டியில் கட்டியடித்தாலும் அவர்கள் அவனைப் பிடித்துக்கொள்வார்கள். பின்னர், ←»ዘሇ சாங்கத்தார் அந்த வண்டிக்காரனுக்கு அபராதம் விதிப்பார்கள்.

காபாதகளுகிய நம் எசமானன், அந்தப் பைரிகளுக் குப் பயந்தே, அன்று இரவு எட்டு மணிக்குமேல் என்னை வண்டியில் கட்டினன். ஏனெனில் அப் போது அவர்கள் அநேகமாய் வீட்டிற்குத் திரும்பி விடுவார்கள். இக்கூலியாளனுக்கு நம் எசமானன் மீது பகையிருந்ததால், அவன் எப்படியோ அச் சமயம் அவ்வலுவலரைக்கண்டு பிடித்து, அவரைத் தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு விரைந்து வந்தான்.

iன் செல்வமே, நம் எசமானன் அந்த அலுவலாள ரைக் கண்டதும் உடல் நடுங்கின்ை ; உடனே வண்டியினின்றும் கீழே குதித்து, அவரிடம் கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தான் ; கைகூப்பித்

சி. - 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/56&oldid=563088" இலிருந்து மீள்விக்கப்பட்டது