பக்கம்:சிவஞானம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 51.

ன்னை அடிப்பதற்கு முயன்ருன். உடனே இருவரும் அங்கே கட்டிப்புரள ஆரம்பித்தனர். இவ்வேடிக் கையைப் பார்க்கச் மக்கள் வந்து அவ்விடத்தே சூழ்ந்து கொண்டனர். அக்கூலியாளன் நம் எச மானனைப் பலமுறை புரட்டிப்புரட்டி உதைத்தான். நம் எசமானன் அப்போது நோயால் உடல் மெலிந்திருந்தானதலால் அக்கூலியாளனைத் திரும் பிப் புரட்டி உதைக்க அவளுல் இயலவில்லை. அதற் குள் அருகே நின்றிருந்த சிலர் அவ்விருவரை பும் விலக்கிச் சண்டையை நிறுத்தினர். நம் எச மானனுக்கு அப்போது பலத்த காயங்கள் நேர்ந் திருந்தன. ஆதலால், அவனுக்குச் சிறிதும் கோபந் தணியவில்லை ; தன் காயங்களைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு மனம் பதைத்தது ; கோபம் மேலும் மேலும் அதிகரித்தது. உடனே அப்படுபாவி தன் சட்டைப் பையில் வைத்திருந்ந கூரான கத்தி யொன்றை விரைந்தெடுத்துச் “சரே'லென்று அக் கூலியாளன் தொண்டையில் ஓங்கிக் குத்தினன். அச்சமயம் அக்கூலியாளன் அதற்கு முன்னர் நடந்தவற்றை அங்குள்ளோர்க்குக் கூறிக்கொண் டிருந்தான். ஆதலால், நம் எசமானன் எண்ணிய கொடுஞ் செய்கையை ஒருவரும் கவனிக்க இடம் இல்லாதிருந்தது. திடீரெனக் கத்தியால் குத்தப் பட்ட அக்கூலியாளன் ஓ’ வென்றலறி நிலத்தில் விழுந்தான். நம் எசமானனே அக்கணமே ஓட்டம் பிடித்தான். அருகே நின்றிருந்தோர்களில் சிலர், அவனைப் பிடியுங்கள் - அவனைப் பிடியுங்கள்’ என்று பின் தொடர்ந்தனர். அவன் கத்தியோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/58&oldid=563090" இலிருந்து மீள்விக்கப்பட்டது