பக்கம்:சிவஞானம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு Г,

என் கண்ணே, இவ்விதம் அன்றைத்தினம் கழிந்தது. நம் எசமானனைக் கண்டுபிடித்தற்குப் போலீஸ் அதிகாரிகள் பல விடங்களிலும் தேடித் தேடித் திரிந்தனர். மறுநாள் காலை பத்து மணியிருக்கும். அப்போது ஒருவன் ஓடிவந்து நம் எசமானியைக் கண்டு மிக்க துயரத்தோடு, அம்மா' நான் என் னென்று சொல்வேன் ! நம் ஊருக்குப் புறத்தே உள்ள இலுப்பைத் தோப்பின் பாழ்ங்கிணற்றில் ஏதோ ஒரு பினம் மிதக்கின்றது. என்று கேள்வி யுற்ற போலீஸ் அதிகாாரிகள் அங்கே விரைந்து சென்ருர்கள். அப்போது, நானும் அவர்களோடு சென்றிருந்தேன். போலீஸ் அதிகாரிகள் அங் குள்ளோரைக் கொண்டு அப்பினத்தை வெளியே எடுத்தார்கள். ஐயோ! என்ன அநியாயம் ! அஃது உன் கணவன் தேகமாக இருந்ததம்மா ! என்று அவசரத்துடன் உரைத்தான். இதைக் கேட்டதும் நம் எசமானி 'ஒ' என்று அலறி, வாயிலும் வயிற்றி லும் அடித்துக் கொண்டு, அவைேடு விரைந் தோடினுள்.

குட்டி-ஐயோ பாவம் ! அவன் கதி இப்படியா முடிந் தது - தாயே, அவன் தங்களுக்குப் புரிந்த கொடுமைகளே முடிவில் அவனுக்கு ஓர் எமனுய் உருவெடுத்து வந்தன போலும் ! அஃது எவ்வித மிருப்பினும் கவலையில்லை அவன் ஒழிந்தான் ; அவன் ஒழிந்தான் அம்மா, ஆல்ை, தாங்கள் ஏன் என்னிடம் அப்போது இவைகளை யெல்லாம் கூறவில்லை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/60&oldid=563092" இலிருந்து மீள்விக்கப்பட்டது