பக்கம்:சிவஞானம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சி வ ஞ.ா ன ம்

என்னென்ன துன்பங்களை யடைந்ததோ ? அவைகளை யெல்லாம் அறிவார் யார் ? அவை எல்லாம் வல்ல இறைவனுக்கும், இக்குதிரைக்குமே தெரியும்,' என்று மிக்க இரக்கத்தோடு மொழிந்தனர்.

உடனே ஒரு சிறுவன் குப்புசாமிப் பிள்ளையைக் கூர்ந்து நோக்கி, "தாதா, இஃது உண்மையில் நடந் தது தானு ? அல்லது ஒரு கட்டுக் கதையா ? ' என்று சந்தேகத்துட்ன் வினவின்ை.

  • பிள்ளைகளே, இஃதோர் கதையன்று ; உண்மை யில் நிகழ்ந்ததே இதில் சிறிதும் ஐயுறவேண்டாம்,' என்றனர் முதியவர்.

'ஆல்ை தாதா, இவைகளெல்லாம் தங்களுக்கு எவ்வாறு தெரியும் ?' என்று அவசரத்துடன் வினவி ன்ை அச்சிறுவருள் ஒருவன். ."

'பிள்ளைகளே, நான் இக்குதிரை இருக்க நேர்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ளோரை அடுத் தடுத்துக் கேட்டும் சிந்தித்தும் இச்செய்திகளை உணர்ந்தேன். இல்லையேல் இவைகளில் ஒரு சிறிதும் எனக்குத் தெரிந்திராது," என்ருர் அப்பெரியவர்.

"அப்படியா ஆல்ை, தாதா, தாங்கள் குதிரை வியாபாரம் செய்யும் மகமதியன் வீட்டுக்குச் சென்றிருந் தீர்களா ?' என்ருன் வேருெரு சிறுவன்.

'அவ்விடம் சென்றேன் ; ஆணுல், நான் அவனைக் காணவில்லை. அவன் வியாபார நிமித்தமாக வெளிநாட் டிற்குச் சென்றிருந்தான். இன்னமும் அவன் திரும்பி வந்திருப்பான் என்று எண்ணுதற்கிடமில்லை,” என அமைதியுடன் விடை யளித்தார் குப்புசாமிப் பிள்ளை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/71&oldid=563103" இலிருந்து மீள்விக்கப்பட்டது