பக்கம்:சிவஞானம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 67

படவேண்டாம். நிதானமாய்க் கேளுங்கள். குதிரையை பும், குட்டியையும் விலை கொடுத்து வாங்கிய அம்முதிய வர் இந்த ஊரில்தான் இருக்கின்ருர். அவரை நீங்கள் எல்லோரும் பார்த்திருக்கின்றீர்கள். அவர் இப்போது உங்களோடுதான் உரையாடிக்கொண்டிருக்கின்ருர். அவர் தாம் குப்புசாமிப் பிள்ளை,” என்று அன்போடும், அமைதி யோடும் மொழிந்தார்.

இதைக் கேட்டதும் சிறுவர்களுக்கு அளவு கடந்த ஆச்சரியம் உண்டாயிற்று. "தாதா ! - இது உண்மை தான-உண்மைதான?' என்று ஒவ்வொருவரும் அவா

வுடன் கேட்டனர்.

" அன்புள்ள சிறுவர்களே. இன்னமும் சந்தேகமா? தோட்டத்திற்குச் சென்று குதிரையையும், அதன் குட்டியையும் பாருங்கள். அப்போது உண்மை விளங்

கும்,” என்ருர் குப்புசாமிப் பிள்ளை.

அம்முதியவர் இதைச் சொல்லி முடிப்பதற்குள். சிறுவர்கள் ஓ’ வென்று சத்த மிட்டுக் கொண்டு தம் இருக்கையை விட்டு எழுப்பிக் குதித்தனர். அவைகளைக் காணவேண்டுமென்னும் அவாவில்ை அவர்கள் ஒருவர் மேலொருவர் விழுந்து தோட்டத்திற்கு ஓடினர். குப்புசாமிப் பிள்ளையும் அவர்களுக்குப் பின்னல் மெது வாய் நடந்து சென்றனர்.

பசும்புற்கள் அடர்ந்துள்ள அத்தோட்டத்தின் ஒரு புறத்தில் தன் இச்சையாய்த் திரிந்து கொண்டிருந்த குதிரைக் குட்டியை அச் சிறுவர்கள் கண்டு மிக்க ஆர் வத்தோடு அதன் அருகே விரைந்தோடினர். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/74&oldid=563106" இலிருந்து மீள்விக்கப்பட்டது