பக்கம்:சிவஞானம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு (69

மல் ஏங்கி நின்றனர். அச்சமயத்தில் குப்புசாமிப்பிள்ளை அங்கே வந்து சேர்ந்தனர். அவரைக் கண்டதும் அக் குதிரைக் குட்டி மிக்க ஆவலோடு ஓடிவந்து அவர் அருகே நின்றது. அப்போது, அச்சிறுவர்களுக்கு உண் டான ஆனந்தம் சொல்ல முடியாது. ஒருவன் அதன் கழுத்தைத் தன் கைகளால் இறுகத் தழுவிக்கொண் டான். வேருெருவன் அதன் முகத்தில் முத்தம் தந் தான். மற்றவர்கள் அதைச் சூழ்ந்து நின்று கொண்டு தம் கைகளால் தட்டிக் கொடுப்பதும் தட்விப் பார்ப் பதுமாய் இருந்தனர். அப்போது அக்குதிரைக் குட்டி யாதும் தோன்றப்பெருமல் திகைத்து நின்றது. உடனே குப்புசாமிப் பிள்ளை அவர்களை நோக்கி, ‘அரு மைச் சிறுவர்களே, போதும்-போதும் ; சிறு குழந்தை யாய அதனைத் தொந்தரவு செய்யவேண்டாம் ; விட்டு விடுங்கள்-விட்டுவிடுங்கள்,' என்று சொல்லி அவர் களை விலக்கினர். -

சிறுவர்களிடமிருந்து விடுபட்ட அந்த குதிரைக் குட்டி முன்போல் தோட்டத்தில் ஓடி விளையாட ஆரம் பித்தது. பின்னர், அச்சிறுவர்கள் குப்புசாமிப் பிள்ளையை நோக்கி, தாதா, எங்கே ; இதன் தாய் ? அதனை நாங்கள் பார்க்க வேண்டும் ; வாருங்கள்வாருங்கள்,' என்று அவரை அழைத்துக் கொண்டு அப்புறம் சென்றனர். சிறிது தூரம் சென்றதும், மெத் தென்று பசும் புல் நிறைந்த ஒரு படுக்கையின் மீது வயது சென்ற குதிரையொன்று படுத்திருத்தலை அச் சிறுவர்கள் கண்டு அவ்விடத்தே விரைந்தோடினர். குப்புசாமிப் பிள்ளை அவர்களைத் தொடர்ந்து மெல்லச் சென்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/76&oldid=563108" இலிருந்து மீள்விக்கப்பட்டது