பக்கம்:சிவஞானம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 75,

அவருக்கு மரியாதை செய்தார். சுவாமியார் மீது அச் சிறுவர்களுக்கும் அதிக அன்பு உண்டு. ஆதலால், அவர் கள் அவரைக் கண்டதும் கைகூப்பித் தொழுது,"சுவாமி வணக்கம் ; இத்துணை நாட்களாகத் தாங்கள் எங்குச் சென்றிருந்தீர்கள் ? " என்று மிக்க பணிவுடன் வினவினர்.

அப்போது நாய்க்குட்டிச் சுவாமியார் அவர்கட்கு வாழ்த்துக்கூற, "அன்புள்ள சிறுவர்களே, நான் தேச யாத்திரையின் நிமித்தம் வடநாடுகளுக்குச் சென்றிருந் தேன். இன்று காலைதான் இவ்வூரை யடைந்தேன்,' என்று கூறிக் குப்புசாமிப் பிள்ளையை நோக்கி, "பிள்ளை யவாள், இவ்விடத்தே குதிரையின் உருவச்சிலை யொன்று இருத்தலின் காரணம் என்ன ?' என்று அதி சயித்துக் கேட்டனர். குப்புசாமிப் பிள்ளை அக்குதிரை யின் வரலாற்றினை அவருக்குச் சுருக்கமாக விளக்கிக் கூறினர். = ي”

அது கேட்ட சுவாமியார், மிகுதியும் மனமிரங்கி, "அந்தோ கொடுமை-கொடுமை,' என்று கூறித் தம் கரங்களால் இரு செவிகளையும் பொத்திக் கொண்டு சிறிது நேரம் மெளனமாய் இருந்தனர். பின்னர், அவர் அங்குள்ள சிறுவர்களை நோக்கி, பிள்ளைகளே, இவ்விதம் எத்துணையோ பிராணிகள் நம்மிடம் அகப் பட்டுத் துன்புற்று இறக்கின்றன. அந்தோ அவை கள் படுந் துயரத்தைப் பார்த்துப் பார்த்து என் கண்களும் பூத்துப்போயின. கேட்டுக் கேட்டு என் செவிகளும் செவிடடைந்தன ; எண்ணி யெண்ணி என் மனமும் புண்பட்டது.- ஆ! எண்ணில்லாத எருதுகள் உழவரிடம் அகப்பட்டுத் துன்புறுகின்றன !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/82&oldid=563114" இலிருந்து மீள்விக்கப்பட்டது