பக்கம்:சிவஞானம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"76 சிவ ஞான ம்

தீமை யென்பது சிறிதும் அறியாத ஆடுகள் ஆயிரக் கணக்காக நாள்தோறும் கொல்லப்படுகின்றன நாய் களும் பூனைகளும் நம்மிடம் படும்பாடுகளோ சொல்லி முடியா ! இவைகளெல்லாம் எந்தக் காலத்தில் துன்பம் நீங்கி இன்புற்று வாழுமோ- எந்தக் காலத்தில் எல்லா வேலைகளும் இயந்திர உதவியினலேயே நடை பெறுமோ-அந்தக் காலத்தில் தான் நம்நாடு சுகமடை யும் ; அப்போது தான் நம் நாடு நாகரிகத்தில் சிறந்த தென்று எல்லோராலும் போற்றப்படும் ; அப்போது தான் நாம் மானுடரென்று மதிக்கத் தக்கவராவோம் இறைவன் இன்னருள் எப்போது சுரக்குமோ ? அறி கிலேன்-அறிகிலேன்.

"சிறுவர்களே, ஒரு பசுவின் கன்று இறந்தமைக் காகத் தன் அருமை மைந்தனை இழந்தான் மனுமுறை கண்ட சோழன் என்னும் மகாராசன் ஒரு புருவைக் காக்கும் நிமித்தம் தன் தசையை அரிந்து அரிந்து கொடுத்தான் சிபிச்சக்கரவர்த்தி என்னும் சிறந்த வள்ளல் ; பசுக்களைக் காத்தலே கடன் எனக் கொண்டு சண்டேசுவர நாயனர் என்னும் பட்டம் பெத்ருர் விசாரசருமர் என்னும் அந்தணச் சிறுவர். இவ்விதம் உயிர்களைக் காத்து உயர்வடைந்த பெரியோர்கள் நம் இந்திய நாட்டில் பலர் இருந்திருக்கின்றனர். ஆதலின், அன்புள்ள சிறுவர்களே, நீங்களும் உங்களால் இயன்ற உதவியைப் புரிந்து பிற உயிர்களின் துன்பங் களைப் போக்குங்கள். எக்காரணத்தைக் கொண்டும், எந்தக் காலத்தும், எவ்வகையான தீங்கையும் அவை கட்குப் புரிய எண்ணுதிர்கள். துன்பம் எல்லோர்க்கும் ஒன்றே. மானிட னென்றும், மிருகமென்றும் பிரித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/83&oldid=563115" இலிருந்து மீள்விக்கப்பட்டது