பக்கம்:சிவஞானம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 77

நோக்காதீர்கள். மானிடன் தன் துன்பத்தை நமக்கு. அறிவிப்பான் , மிருகத்திற்கோ அவ்வாறு அறிவிக்க இயலாது, ஆதலால், அதன் துயரத்தை நாம் மிகுதி. யும் கவனித்தல் வேண்டும்.

"அறிவின் மிக்க சிறுவர்களே, நான் உங்களுக்கு இன்னமும் அதிகமாய்க் கூறவேண்டியதில்லை. மக்க ளாகிய நமக்கு இன்றியமையாது வேண்டப்படுவது. ஒன்று உண்டு அதுவே அன்பு என்னும் அருங்குண மாகும்.நாம் இவ்வுலகத்தில் இன்புற்று வாழுதற்கும். புகழ்பெற்றுஓங்குதற்கும் ஆதாரமாய் இருப்பது அன்பே, மறு வுலக இன்பங்களை அநுபவிப்பதற்கும், அழியாத. மோட்ச இன்பத்தைப் பெறுதற்கும் அடிப்படையாய் அமைந்து கிடப்பது அன்பே. நாம் ஒருவரோடு ஒருவர் ஆடிக் குலாவிக் களித்தற்குக் காரணமாய் இருப்பது அன்பே. எல்லா வுயிர்களையும் படைத்துக் காத்து. அழிக்கும் இறைவனது இயற்கை வடிவம் அன்பே. ஆதலால், நாம் அதனை நாடோறும் பொன்னேபோல் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும் ; அது தினமும் அதனை நாம் ஓம்பி வளர்த்தல் வேண்டும். அதுவே நமக்கு அழியாத செல்வம் அதுவே நமக்கு நீங்காத தோழன் , அதுவே நமக்குத் தாய், தந்தை, ஆசான், அரசன் அனைத்தும் ஆகும், அதனைப் பெறுதற்கே நாம் இவ்வுலகத்தில் பிறந்தோம் ; இவ்வரிய மானுட தேகத்தைப் பெற்ருேம். ஆதிலால், அன்பும் அருமை யும் வாய்ந்த இன்பச் சிறுவர்களே, நான் இதுகாறும் கூறியவற்றைச் சிறிதும் மறவாது உயிர்களைக் காத்து அன்பினை வளர்த்து அழியாப் பெரும் பேற்றைஅடைய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/84&oldid=563116" இலிருந்து மீள்விக்கப்பட்டது