பக்கம்:சிவஞானம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 79

வாறு அச்சம் உண்டாகிறதோ அவ்வாறே அவை

களுக்கும் நம்மைக் கண்டால் அச்சம் உண்டாகிறது. நம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு நாம் எவ் வாறு அவைகளைக் கண்டால் கொன்றுபோட எண்ணு கின்ருேமோ, அவ்வாறே அவைகளும், தம்மைக் காப் பாற்றிக்கொள்ளும் பொருட்டு, நம்மைக் கண்டால் தடிக்க முந்துகின்றன. ஆதலால், அவை நம்மை நெருங்குங் "அத்து, நாம் மனம் பதருமல் அசைவற்று ஒரே இடத்தில் நின்றிருப்போமாகில் அவைகளால் நமக்கு ஒரு தீங்கும் நேராது. நாம் சிறிது அசைந் தாலும் அவை அச்சத்தால் நம்மைக் கடிக்க முயலு கின்றன. இதை நிரூபித்தற்குச் சிறிது காலத்திற்கு முன் நிகழ்ந்த ஒரு செய்திய்ை உரைக்கின்றேன்; கேளுங்கள் :

தைரியமுள்ள போர்வீரன்

'அருமைத் சிறுவர்களே, சில ஆண்டுகளுக்கு முன் பொம்பாய்ப் பட்டணத்திலிருந்த போர்வீரன் ஒரு வன் ஒரு நாள் குடி வெறியினல் அறிவு மயங்கி வழி யில் செல்லுவோன்ர அடிப்பதும் திட்டுவதுமாய் இருந்தான். அதனை அறிந்த அவன் மேலதிகாரி அவன்மீது சினந்து அவனுக்கு ஒருவாரக் கடுங்கா வல்’ என்று தண்டனை விதித்தார். அப்போர் வீரன் மயக்கம் தெளிந்ததும் தான் புரிந்த பிழையைக் குறித் துப் பெரிதும் வருந்தின்ை. ; கடுங்காவற் சிறைச்சாலை யில் தான் ஒரு வாரம் வரையில் இருக்க நேர்ந்ததை எண்ணி யெண்ணி ஏங்கின்ை. தான் செய்த குற் றத்தை மன்னித்து விடும்படி தன் தலைவனிடம் அவன் பெரிது சிண்டினன். என்ன முயன்றும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/86&oldid=563118" இலிருந்து மீள்விக்கப்பட்டது