பக்கம்:சிவஞானம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சி வ ஞான ம்

எண்ணம் சிறிதும் நிறைவேறவில்லை. ஆதலால், அவன் அன்றே காவற் கூடத்திற்குக் கொண்டுபோகப் பட்டான்.

" கடுங்காவல் என்பது மிகவும் கொடுமையான தண்டனை. அத்தண்டனையைப் பெற்றவன் ஒருவரோ டும் பேசுதல் கூடாது ; அவனை ஒருவரும் கண்ணெ டுத்துப் பார்க்கமாட்டார்கள். அவனுக்கு விதித்திருக் கும் காலம் வரையில் அவன் அச்சிறையிலேயே இருத் தல்வேண்டும். மலஜலகழிவுகளையும் அவன் அவ்விடத் திலேயே கழித்தல் வேண்டுமாம்.

கபிள்ளைளே, இத்தகைய கடுங்காவலில் அப்போர் வீரன் இருக்க நேர்ந்தது. ஆதலால், அவன் அப்போது தன் நிலைமையைக் குறித்து மிகுதியும் வருந்தின்ை பின்னர், தன் மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு அவன் அச்சிற்றறையைக் கூர்ந்து நோக்கினன். அதன் நான்கு புறமும் உறுதியான சுவர்கள் உயர மாக எழுப்பப்பட்டிருந்தன. அவ்வறைக்குக் காற்று வருதற் பொருட்டு, ஆள் உயரத்திற்குமேல், இருப்புக் கம்பிகளால் இணைக்கப்பெற்ற ஒரு சிறு துவாரம் இருந்: தது. அவ்வறையின் கதவும் மிக்க வலுவாகக் காணப் பட்டது. அப்போது, பனி மிகுந்த குளிர்கால மாதலால், அவன் இருந்த இடம் மிகவும் ஈரக்கசிவுள்ளதாய் இருந் தது. அவ்வறையின் ஒரு புறத்தே சுவரின் அடியில் சிறு சந்து ஒன்று காணப்பட்டது. அஃது அவ்வறை யைக் கழுவிச் சுத்தம் செய்தற் பொருட்டு அமைக்கப் பட்டுள்ளது என்று அவன் எண்ணின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/87&oldid=563119" இலிருந்து மீள்விக்கப்பட்டது