பக்கம்:சிவஞானம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சி வ ஞா ன ம்

தலையை உயரத் துக்கிச் சிறிது நேரம் நாற்புறமும் சுற்றிப் பார்த்தது.

அன்புள்ள சிறுவர்களே, கவனியுங்கள்-கவனி யுங்கள். மிகப் பரிதாபகரமான அவன் நிலைமையினைக் கூர்ந்து கவனியுங்கள். அப்போது, அவன் தன் கண் களைச் சிறிது திறந்திருப்பானே யாகில் அக்கணமே அவன் உயிர் அவ்வுடலை விட்டு நீங்கியிருக்கும். அச்சத் தால் மார்பு ' படபட" வென்று அடித்திருந்தாலும் சரியே-மூச்சு சிறிது அதிகமாய் விட்டிருந்தாலும் சரியே-அவன் அப்போதே உயிரிழந்திருப்பான். அந்த ஒப்பற்ற உண்மை வீரனுக்கோ இவ்விதத் தடை கள் சிறிதும் நேரவில்லை. அவன் அச்சமயத்தும் பிணம் போல் அசைவற்றுக் கிடந்தான். அந்தச் சண்டாளப் பாம்போ அவன் மார்பை விட்டு அகலவே யில்லை. அவ்விடத்திலேயே அது படுத்துறங்க ஆரம்பித்தது. என்ன செய்வான் பாவம் அவ்வீரன்! அவனுக்குத் தன் உயிரின் மீதிருந்த நம்பிக்கை அப்போது முற்றி லும் ஒழிந்தது. ஆலுைம், அவன் தைரியத்தைக் கைவிட வில்லை. மணி மூன்றடித்தது ; மூன்றரையும் ஆயிற்று ; அப்போதும் அஃது அவ்விடத்தை விட்டு அசையவே

'அருமைச் சிறுவர்களே, இவ்வண்ணம் இருக்க யாரால் இயலும் முற்றிலும் துறந்த முனிவலுைம் ஆகாது-ஆகாது. ஆல்ை, அவ்வீரனே சிறிதும் மனம் சலிக்கவில்லை. அவன் கைகளும் கால்களும் மரத் துப்போயின. தும்மல், இருமல், கனைத்தல் முதலியன அவனிடத்தே தலை காட்டவில்லை. ஊக்கம் அவன் உள்ளத்தே குடிகொண்டிருந்தது ; தைரிய லட்சுமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/91&oldid=563123" இலிருந்து மீள்விக்கப்பட்டது