பக்கம்:சிவஞானம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சி வ ஞா னம்

அது பக்கலிலேயே படுத்திருக்கினும் இருக்கலாம். அல்லது வெளியே சென்றிருக்கினும் இருக்கலாம். அஃது அவனுக்கு எவ்வாறு தெரியும்? அவன் தன் கண்களைத் திறக்கும்போது அப்பாம்பு அவ்வறை யிலேயே இருக்குமானுல் அவனை அக்கணமே கடித்து விடுமன்ருே ? ஆதலால், அவன் அப்போதும் பொறு மையையே கடைப்பிடித்திருந்தான்.

காலை மணி ஏழரையாயிற்று ; கதிரவன் கிரணங் கள் அவன் கண்கள்மீது பட்டன. அப்போதுதான் அப்போர்வீரன் தன் படுக்கையை விட்டு எழுந்திருக்க எண்ணங்கொண்டான். எனினும், அவன் உடனே அவ்வாறு செய்யவில்லை. முதலில் அவன் தன் கண் களைச் சிறிது சிறிதாகத் திறந்தான் ; பின்னர், அவன் தன் மீதேனும் தனக்குப் புறத்தேனும் தனக்குத் தெரி யாதபடி அப்பாம்பு மறைந்திருக்கலாம் என்னும் எண் ணத்தோடு தன் பாதத்திலிருந்து தோள்கள் வரை ஒரு முறை கூர்ந்து நோக்கின்ை. ஆல்ை, அவ்வீரன் அச் சமயத்தும் தன் உடலைக் கொஞ்சமேனும் அசைக்க வில்லை. அதன் பின்னர், அவன் தன் தலையைச் சிறிதும் அசைக்காது அவ்வறையின் மூன்று பக்கங்களிலும் விழிகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். அரவம் அவ் விடங்களிலும் இல்லாமை கண்டு அவ்வீரன் முற்றிலும் மனங்களித்தான். எனினும், அவ்விடத்தை விட்டு அவன் அப்போதும் எழுந்திருக்கவில்லை. ஏனெனில், தனக்குப் பின்புறத்தில் ஒருகால் இருக்கலாம் என்னும் எண்ணம் அப்போது அவன் மனத்தில் தோன்றியது. ஆதலால், அவன் சிறிது நேரம் சிந்திக்கலான்ை. அந்தப் பெரும் பாம்பு முன்பு வந்த அத்துவாரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/93&oldid=563125" இலிருந்து மீள்விக்கப்பட்டது