பக்கம்:சிவஞானம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சிவ ஞா ன ம்

அதைக் கண்டு சிறிதும் அஞ்சவில்லை. அவன் அக் கணமே விரைந்து அதன் கழுத்தை உறுதியாய்ப் பிடித்துக் கொண்டான். அப்போது, அந்தப் பாம்பு வெகுண்டு தன் வாலை நீட்டிற்று. அவ்வீரன் அதையும் உடனே மற்ருெரு கையால் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான்.

" சிறுவர்களே, அப்பெரும்பாம்பை அவன் உறுதி யாய்ப் பிடித்துக் கொண்டே அவ்வறையின் கதவருகே சென்று தன் கால்களால் அதனைப் படீர்-படீர்' என்று உதைத்தான். வெகு நேரம் வரையில் ஒருவரும் அங்கே வரவில்லை. பின்னர், ஒரு காவலாளன் அவ்விடத்தை அடைந்து, காரணம் யாதென வினவினன். அப்போது அவ்வீரன் பாம்பு-பாம்பு ; கையில் பிடித்துக்கொண்

டிருக்கிறேன் ; கதவைத் திற-கதவைத் திற,’ என்று கதறின்ை. அக்காவலாளன் உடனே ஒடிச் சென்று தலைமைக் காவலாளனிடம் அச்செய்தியைக் கூறி அவனையும் அழைத்துக் கொண்டு திறவு கோலுடன் விரைந்து வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/95&oldid=563127" இலிருந்து மீள்விக்கப்பட்டது