பக்கம்:சிவஞானம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 89

சிறைச்சாலையின் கதவு திறக்கப்பட்டது . அப் போர்வீரன் அந்தப் பெரிய பாம்போடு வெளியே வரு தலைக் கண்டு. எல்லோரும் பயந்து ஓட ஆரம்பித்தனர். அப்போது, அவன் அவர்களுக்குத் தைரிய மொழிகள் கூறி, அவர்களை அழைத்துக் கொண்டு புதர் அடர்ந் திருந்த ஓர் இடத்தை அடைந்து, அங்கே அந்தப் பெரும் பாம்பை விசிறி எறிந்தான். அதை அவன் கொன்று போடாமைக்கு அநேகர் வருந்தினர். அப் போது அவன்; ஐயா, என்னைக் கொல்லாது விடுத்த அதனைக் கொல்லுதல் நியாயமாகுமா ? நான் எவ் வாறு அதனைக்கண்டு அஞ்சினேனே, அவ்விதம் அது வும் என்னைக் கண்டு அஞ்சியிருக்கு மல்லவா ? ஆத லின், அப்பாம்பும் என்னைப்போல் இன்பமாய்ச்செல்லு தலே நியாயம் என்று, கூறின்ை.

"பின்னர், அன்றிரவு முழுவதும் தான்பட்ட துன் பங்களை அவன் அவர்களுக்கு ஒன்றையும் விடாது கூறினன். அவனது வீரச் செயலினைக் கேட்டு எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். இச்செய்தி அப் போர்வீரனது மேலதிகாரிக்கும் எட்டிற்று, அது கேட்ட அவ்வதிகாரி அப்போர்வீரனது ஆண்மையைக் குறித் தும், பொறுமையைக் குறித்தும் மிகுதியும் மகிழ் வடைந்து, அவனை அன்றே அச்சிறைச்சாலையினின் றும் நீக்கி அவனுக்கு உயர்ந்த உத்தியோகமும் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

ஆதலால், அருமைச் சிறுவர்களே, தேளும் பாம்பும் அச்சத்தாலேயே நம்மைக் கடிக்க வருகின்றன. அவை வாழும் இடத்திற்கு நாம் செல்லாமலிருந்தால் நம்மை எந்தப் பிராணியும் துன்புறுத்தாது. இதை

日。一7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/96&oldid=563128" இலிருந்து மீள்விக்கப்பட்டது