பக்கம்:சிவஞானம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 சி வ ஞா ன ம்

நிரூபிப்பதற்கு இது போன்ற இன்னும் அநேக சம்ப வங்கள் இப்போது என் நினைவில் வருகின்றன. அவைகளை யெல்லாம் இப்போது எடுத்துச் சொல்லு வதற்கு எனக்குப் போதிய நேரமில்லை. அவைகளைப் பின்னர்க் கூறுகின்றேன்.' என்பதோடு அச்சுவாமி யார் தம்பேச்சை முடித்தனர்.

நல்லுபதேசம்

நாய்க்குட்டிச் சுவாமியார் இவ்விதம் கூறியதைக் கேட்ட சிறுவர்கள் மிகவும் வியப்படைந்தனர் ; அவர் கள் அப்போர்வீரனின் மனவலிமையைக் குறித்துப் பெரிதும் புகழ்ந்து பேசினர். அப்போது, குப்புசாமிப் பிள்ளை அது சம்பந்தமாகத் தமக்கு தெரிந்த பல செய்தி களைப் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறினர்.

இவ்வாறு சிறிது நேரம் சென்றது. பின்னர், மணி வண்ணன் என்னும் சிறுவன் சுவாமியாரை நோக்கி, "சுவாமி, கொசுகு, மூட்டைப்பூச்சி முதலியன நாம் சும்மா விருப்பினும் நம்மைத் துன்புறுத்துகின்றனவே. அதற்கென்ன செய்வது ?" என்று அவாவுடன் வினவின்ை.

அதுகேட்ட நாய்க்குட்டிச் சுவாமியார் அச்சிறு வனைப் பார்த்து, 'அப்பா, அஃது உண்மையே நம் முடைய இரத்தத்தைக் குடித்து உயிர்வாழும்படி இறை வன் அவைகளை உற்பத்தி செய்திருக்கின்ருன், என்று சிலர் கூறுவார்கள் ; எவன் ஒருவன் தன் உடலையும் தான் வசிக்கும் இடத்தையும் சுத்தம் இல்லாமல் வைத் திருக்கிருளுே, அவனைத் தண்டித்தற் பொருட்டு அவை களைக் கடவுள் அவனிடம் அனுப்புகிருர், என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/97&oldid=563129" இலிருந்து மீள்விக்கப்பட்டது