பக்கம்:சிவஞானம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சி வ ஞ | ன ம்

அவர் மிக்க ஏழை ஆணுல், உயிர்களிடத்து இரக்க முள்ள உத்தமர்; தூய உள்ளமும், பொறையும் நிறையும் வாய்ந்த பெரியார். அம்முதியவர், அன்றிரவு திருவிழா வைக் கண்ணுரக் கண்டு முடிந்ததும் படுத்துறங்கப் பலவிடத்தும் சென்று திரிந்தார். அன்று மக்கள் மிகுதி யாய் வந்திருந்தமையால் அவருக்கு எங்கும் இடம் அகப்படவில்லை. முடிவில் அப்பெரியார் ஒரு பெரிய மண்டபத்தைக் கண்டார். அவ்விடத்தும் பலர் பள்ளி கொண்டிருந்தார்கள் ; எனினும் ஒரு மூலையில், ஓர் ஆள் படுத்துறங்கப் போதிய இடம் விடுபட்டிருந்தது. அத னைக் கண்ட அம்முதியவர் மிகுதியும் மனமுவந்து அவ் விடத்தில் படுத்து உறங்கலாயினுர்,

அவர் அவ்வாறு படுத்த சிறிது நேரத்திற்கெல் லாம் யாதோ ஒன்று வெடுக்கெனத் தம்மைக் கடிப்பது போன்று அவருக்குத் தோன்றிற்று. ஆதலின், அப் பெரியார் விரைந்தெழுந்து, தாம் படுத்திருந்த இடத் தைக் கையால் தடவிப் பார்த்தனர். அப்போது, வழ வழப்பும் வட்டவடிவமும் பெற்ற ஒரு சிறு பொருள் அவர் கையில் பட்டது. உடனே, அவ்வயோதிகள் அஃது ஒரு பருத்த முட்டைப் பூச்சியே என நிச்சயித்து அதற் குத்துன்பம் உண்டாகாதபடி அதனைத் தம் விரல்களால் பக்குவமாக எடுத்தார். பின்னர், அவர் அதனை இன் னது செய்வதென்று தோன்ருமல் நெடுநேரம் யோசிக் கலாஞர். ஏனெனில், அதனைக் கொல்ல அவருக்குச் சிறிதும் விருப்பமில்லை. சிறிது தூரத்தில் விட்டுவிடலா மென்ருலோ எவ்விடத்தும் மக்கள் பலர் படுத்துறங்குவ தால் அஃது அவர்கட்குத் தீமையாய் முடியும். அது விளைவிக்கும் துன்பத்தை நினைக்கும்போது அதனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/99&oldid=563131" இலிருந்து மீள்விக்கப்பட்டது