பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவாரம். 29 அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனைய் போற்றி Atrấvargatku aaramudham aanaay põtri அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி allal arruththu adiyēnai aanndaay potri மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி Matroruvar oppillaa maindhaa põtri வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி Vaanavargall põtrum marundhē pötri செற்றவர்தம் புரம் எரித்த சிவனே போற்றி Setravardham puram eriththa sivane potri திருமூலட்டானனே போற்றி போற்றி. thirumūlat taananē põtri pötri. கற்றவர்கள் உண்ணும் பழமே போற்றி! உன் திருவடியை அடைந்தவர் அடையும் மோட்சமாக இருப்பவனே போற்றி! பற்று அற்றவர்களுக்கு அமுதம் ஆனவனே போற்றி! இரு வினையை அறுத்து என்னை ஆண்டுகொண்டவனே போற்றி! வேறு ஒருவரும் ஒப்பு இல்லாதவனே போற்றி! தேவர்கள் போற்றும் அமுதம் ஆகியவனே போற்றி! பகைவர்களுடைய முப்புரங்களையும் எரித்த சிவனே போற்றி! திருவாரூரில் திருமூலட்டானத்து எழுந்தருளியுள்ள இறைவனே போற்றி! போற்றி! கற்றவர்கள்–the learned; wise உண்ணும்—to eat; to taste கனி-பழம்-fruit போற்றி–Hail கழல்-வீரக்கழல்-திருவடி-anklet-feet கதி-முத்தி-beautitude அற்றவர்—those who have renounced the world ஆரமும்- rare ambrosia அல்லல்—(the fruits) of good and evil deed. அறுத்து-நீக்கி–to sever மற்றொருவர்—anyone else ஒப்பு இல்லா—without an equal மைந்தா- Oh strong one! (Omnipotent) வானவர்கள்-தேவர்கள்-celestials போற்றும்–adore மருந்து-அமிர்தம்-ambrosia