பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பதிப்புரை தமிழும் சைவமும் நம்மவரிடையே நன்கு வளர நெட்டால் தமிழ் வைதீக சபை செய்து வரும் பணிகள் பல. நால்வர் வரலாற்றைப் படங்களுடன், நம்நாட்டில் பழக் கத்தில் உள்ள நால்வர் பாடல்கள் பலவற்றை ஆங்கில ஒலியுடன் (Transliteration) **** ósui திருமுறைத் திாட்டு’ என்ற நூலே வெளியிட்டோம். பின்னர் இளஞ்சிருர்களும் தமிழ் மொழியைக் கற்பதற்கு வழிசெய்யும் வகையில் நால்வர் திருமுறைத் திரட்டில் வெளியிடப்பட்ட பல பாடல்களுக்கும் தமிழ், ஆங்கில உரை களுடன் அருஞ்சொற் பொருளும் தந்து அவற்றுடன் திருப்புகழ், திருவருட்பா பாடல்களில் சிலவற்றையும் சேர்த்து 'சிவன் அருள் திட்டு' என்ற நூலை வெளியிட்டோம். நமது நால்வர் திருமுறைத் திரட்டில் வெளியிடப்பட்டு, சிவன் அருள் திரட்டில் விடுபட்ட நால்வர் பாடல்கட்குத் தமிழ் ஆங்கில உரைகளுடனும் அருஞ்சொற் பொருளுடனும், வழக்கம் போல் பாடல்கட்கு ஆங்கில ஒலிக்குறிப்புடனும் (Transliteration) இந் நூல் வெளியிடப் படுகிறது. தமிழோடு இசைபாடல் மறவாத நம் சைவத் தமிழ் அன்பர் கட்கு இந்நூல் ஒரு தேனுாறும் அமிழ்தம் ஆகும். சுவைத்துப் பயன் பெற வேண்டுகிறேன். இந்நூலுக்கு உரைவிளக்கம் அளித்த சிவநெறிச் செல்வர், திரு. கே. எம். வேங்கடராமையா M. A. அவர்கட்கும் பாடல்கட்கு ஆங்கில ஆக்கம் (Transliteration) செய்து தந்த திரு. கே. எம். கோபிநாத் B. Sc. அவர்கட்கும், நூல் சிறப்புற வெளிவர உதவி செய்த தமிழாசிரியர் வித்துவான் திருகே எம். கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கும் நமது நன்றிகள். சிறப்பாக திரு. என். சி நாயுடு அவர்கட்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிருேம். அவர்களுக்கும் சிவனருள் சிறக்க. சி.ஜி. செட்டி தலைவர் நெட்டால் தமிழ் வைதீக சபை