பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

40 சுந்தரர் Oh Lord having golden body! Oh Lord wearing the tiger's skin on your waist! Oh Lord who burnt the three fortresses! Oh Lord who is enshrined at Vridhdhachalam! In the presence of Paravai having lightning-like tender waist, what have you done to relieve my distress? பிறையாரும் சடை எம்பெருமான் அருளாய் என்று Pirraiyaarum sadai emberumaan arullaay endru முறையாய் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர் தம்மை Murraiyaai vandhu amarar vannangnm mudhukundrar thammai மறையார் தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன Murraiyaar tham kurisil vayal naaval aaruran sonna இறையார் பாடல் வல்லார்க்கு எளிதாம் சிவலோகம் அதே. Irraiyaar paadal vallaarkku ellidhaam sivalogam adha. திருச்சிற்றம்பலம் "பிறை பொருந்திய சடையையுடைய எம்பெருமானே! திருவருள் செய்வாயாக! என்று முறையய்வந்து தேவர்கள் வணங்கும் விருத்தாசலத்தில் உள்ள கடவுளை, வேதம் வல்ல அந்தணர்களுக்குத் தலைவனும் வயல்கள் சூழ்ந்த திருநாவலூரினனும் ஆன ஆரூரன் என்னும் சுந்தரர் பாடினார். இறைவனது திருவருள் பொருந்திய இப்பாடல்கள் பாட வல்ல வர்க்குச் சிவலோகம் எளிமையாகும். பிறை -- crescent எம்பெருமான் -- my Lord! முறையால் - one by one வணங்கும் - worshipping சடை-matted locks அருளாய்-bestow grace அமரர் - celestial முதுகுன்றர்-The Lord of Vriddhachalam மறையார்- வேதம் வல்ல அந்தணர்- Brahmins well versed in vedas குரிசில் - தலைவன் - master வயல் -fields நாவல் - நாவலூர்-Navalur-the place of Sundarar ஆரூரன் - சுந்தரர்- Arūran name of Sundarar சொன்ன - told-sung வல்லார்--well versed இறை ஆர் பாடல்-songs of divine grace எளிதுஆம்-easy to get சிவலோகம் - Sivaloka