பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இட திருச்சிற்றம்பலம் திருநாவுக்கரசு சுவாமிகள் வரலாறும் திருப்பாடல்களும் சிவம் பெருக்கும் தமிழ்நாட்டில் (தென் ஆர்க்காடு மாவட் டத்தில்) திருவாமூர் என்ற தலம் இருக்கிறது. இத் தலத்தில் உள்ள வேளாளர்கள் சிறந்த சிவ பக்தி உடையவர்கள். அவர்களில் ஒருவர் புகழஞர் என்பவர். இவர் மனைவியின் பெயர் மாதினியார். இவர்களுக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக் குழந்தைக்குத் திலகவதியார் என்று பெயரிட்டார்கள். பிறகு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு மருள் நீக்கியார் என்று பெயர் சூட்டினர்கள். மருள் நீக்கியார் நன்ருகப்படித்தார்; நல்ல ஒழுக்கம் உடைய வராக இருந்தார்; பல சிறந்த குணங்களையும் கொண்டி ருந்தார். அந் நாளில் இவருடைய தந்தையும் தாயும் இறந்து போளுர் கள். மருள் நீக்கியார் தம் தமக்கையின் ஆதரவில் வளர்ந்தார்: பல சமயங்களைப் பற்றியும் நன்கு படித்தார். திருவாமூருக்கு அருகில் பாடலிபுரம் என்ற பெயரில் ஒர் ஊர் இருந்தது. அதற்குத் திருப்பாதிரிப் புலியூர் என்றும் பெயர் உண்டு. அங்கே, சில சமண சமயத் துறவிகள் இருந்தார்கள். அத் துறவிகள் சமண சமயத்தைப் பற்றி நன்ருக அறிந்தவர்கள். அவர்களிடத்தில் சமண சமயக் கொள்கைகளைக் கற்பதற்கு மருள் நீக்கியார் சென்ருர்; நன்கு படித்தார்; சைவ சமயத்தைக் கைவிட்டார்: சமண சமயத்தைத் தழுவினர். இவருடைய அறிவைச் சமணர்கள் புகழ்ந்தார்கள். இவருக்குத் தருமசேனர் என்ற பட்டத்தையும் கொடுத்தார்கள். இவர் புத்த சமயத்தவரை வாதில்வென்று சிறந்து விளங்கினர். தம்பி சமணர் ஆன செய்தியைத் திலகவதியார் கேள்விப் பட்டார்: வருந்தினர்; தம் ஊருக்கு அருகில் உள்ள திருவதிகை என்ற ஊருக்கு போளுர், அவ்வூர்க் கோயிலுக்குத் தினமும்