பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 போவார்; கோயிலில் பல தொண்டுகளைச் செய்வார்; இறைவனை வணங்குவார்; "சிவபெருமானே எனக்கு ஒரே ஒரு தம்பி; அத் தம்பி வேறு சமயத்துக்குப் போய் விட்டான்; என் தம்பி மறுபடியும் சைவ சமயத்துக்குத் திரும்பி வர வேண்டும்; கடவுளே! நீதான் அருள் செய்ய வேண்டும்' என்று நாள்தோறும் வேண்டிக் கொள்வார். சிவபெருமான் திலகவதியாரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்; திலகவதியாரின் கனவில் தோன்றினர்; 'திலக வதியே! உன் தம்பிக்குச் சூலை நோய் கொடுத்து மறுபடியும் சைவ சமயத்துக்கு திரும்புமாறு செய்வேன்' என்று கூறினர். பாடலிபுரத்தில் இருந்த தருமசேனருக்குத் திடீர் என்று சூலை நோய் வந்தது: வயிற்றில் பொறுக்க முடியாத வலி; வலி கூடியதே தவிரக் குறையவில்லை. உடன் இருந்தவர்கள் பலவிதமான மருந்து களைக் கொடுத்தார்கள்; வலி நீங்கவில்லை. அவர்களும் தரும சேனரைக் கைவிட்டார்கள். தருமசேனருக்குத் தம் தமக்கையின் நினைவு வந்தது; அவருக்குச் சொல்லி அனுப்பினர். திலகவதியார் சமணர்கள் இருக்கும் இடத்துக்கு வரமுடியாது என்று சொல்லி விட்டார். தருமசேனர் திலகவதியார் இருக்கும் திருவதிகைக்குச் சென்ருர், போய்ச் சேர்ந்த நேரம் விடியற்காலை; திலகவதியாரும் கோயிலுக்குப் போகிற சமயம். அப்பொழுது தருமசேனர் தமக்கை யாரின் காலில் விழுந்து வணங்கினர். திலகவதியார் தம் தம்பிக்குத் திருநீறு கொடுத்தார். அவரும் திருநீறு பூசிக் கொண் டார். நோயும் குறையத் தொடங்கியது. தம் தமக்கையோடு கோயிலுக்குச் சென்ருர், இறைவனை வணங்கினர். இறைவனும் அவருக்குப் பாடல் பாடும் உணர்ச்சியைக் கொடுத்தார். அவரும் 'கூற்ருயினவாறு விலக்ககிலிர்' என்று தொடங்கும் பதிகம் பாடினர். சூலைநோய் நீங்கியது. திருவதிகைக் கோயிலில் உள்ள சிவபெருமான் இப் பாடல் களைக் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தார். அப்பொழுது "அன்பனே! நீ தமிழில் மிக அழகாகப் பாடிய்ை: ஆகையால் இன்று முதல் உனக்குத் திருநாவுக்காசு என்ற பெயர் விளங் கட்டும்' என்று அசரீரி எழுந்தது. அன்று முதல் அவரை எல்லோரும் திருநாவுக்கரசர் என்று அழைத்தார்கள்.