பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 திருநாவுக்கரசரும் சமண சமயத்தை விட்டார்; திருவதிகை யிலேயே தங்கினர்; திருநீறு பூசினர்; உருத்திராக்கம் அணிந்தார்: சிவத்தொண்டு புரிந்துகொண்டு இருந்தார். இதனைச் சமணர் கேள்விப்பட்டார்கள்; தம் சமயத்துக்குக் கேடு வருமோ என்று பயந்தார்கள். அந் நாட்களில் காஞ்சிபுரத்தில் அரசனுக இருந்த பல்லவ அரசன் மகேந்திரவர்மன். அவனிடம் சென்று முறையிட்டார்கள். அரசனும் அவர் சொற்களைக் கேட் டான்: திருநாவுக்கரசரை அழைத்து வருமாறு அமைச்சர்களுக்குக் கட்டளை பிறப்பித்தான். அமைச்சர்களும் சென்று அரசனது ஆணையைத் திருநாவுக்கரசரிடம் கூறினர்கள்: திருநாவுக்கரசர், நான் சிவனுக்கு ஆள்; நீங்கள் யார்? அரசன் ஆவான் யார்? என்று கூறினர்: "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்' என்று தொடங்கும் பதிகம் பாடினர். வந்த அமைச்சர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. திருநாவுக்கரசரை வணங் கினர்கள்: வேண்டினர்கள், அரசனிடம் அழைத்துச் சென்ருர்கள். சமணர் கூறியபடி அரசன் திருநாவுக்கரசரை நீற்றறையில் இடுமாறு கட்டளை இட்டான். அங்ங்ணமே அவரைச் சுண்ணும்புக் காளவாயில் அடைத்தனர். திருநாவுக்கரசர் சிவ சிந்தனையுடன் இருந்தார். மாசில் வினையும்' என்று தொடங்கிப் பதிகம் பாடினர். நீற்றறையும் குளிர்ச்சியாக இருந்தது. ஏழு நாட்கள் கழித்து நீற்றறையைத் திறந்து பார்த்தார்கள் அதில் திருநாவுக்கரசர் உயிரோடு இருப்பதைக் கண்டார்கள். வியப்படைந்தார்கள். பிறகு சமணர்கள் பால் சோற்றில் நஞ்சு (poison) கலந்து திருநாவுக்கரசருக்குக் கொடுத்தார்கள்: சிவபெருமான் திருவரு ளால் நஞ்சு அமிர்தமாக மாறியது.

  • யானையின் காலில் கிடத்தித் திருநாவுக்கரசரைக் கொல் லுங்கள்' என்று அரசன் ஆணே இட்டான். திருநாவுக்கரசரும் 'கண்ண வெண் சந்தனச்சாந்து' என்ற பதிகம் பாடினர் யானை யும் திருநாவுக்கரசரை வலம் வந்து வணங்கியது; தன்னை ஏவிய பாகர்களைக் கொன்று ஓடியது.