பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 அப்பரும் நல்லூருக்குச் சென்ருர். சிவபெருமானும் தம் பாத மலரை அப்பர் தலைமேல் சூட்டினர். (இது திருவடி தீட்சை ஆகும்.) நல்லூரில் இருந்து திங்களுர் என்ற தலத்துக்குச் சென்ருர் அப்பர். அவ்வூர்ப் பெருவழியில் ஒரு தண்ணிர்ப் பந்தல் இருந்தது. அதற்குத் 'திருநாவுக்கரசர் தண்ணிர்ப் பந்தல்' என்று பெயர் இடப் பட்டு இருந்தது. "இப் பந்தலுக்கு இப் பெயர் இட்டது யார்?' என்று அப்பர் கேட்டார். “அதை அப்பூதி அடிகள் வைத்தார்' என்று சொன்னர்கள். அப்பர் அப்பூதி அடிகளைக் காண விரும்பினர்; அப்பூதி அடிகளின் வீட்டிற்குச் சென்ருர். அப்பூதி திருநாவுக்கரசரைப் பார்த்ததே இல்லை. எனினும், சமணர்கள் செய்த சூழ்ச்சிகளை அப்பர் வென்றதைக் கேட்டார். அப்பூதி, காணுமலே அன்பு கொண்டார்; தம் வீட்டில் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசு என்று பெயரிட்டார். தம் குழந்தைகளுக்கும் அவர் பெயரையே வைத்தார். இத்தகைய அப்பூதி அடிகளைப் பார்த்து 'அடிகளே! நீர்வைத்த தண்ணிர்ப் பந்தலுக்கு உம்முடைய பெயரை வைக்காமல் வேறு ஒருவர் பெயரை ஏன் வைத்தீர்?' என்று கேட்டார். வேறு ஒரு பேர் என்று திருநாவுக்கரசர் பெயரைச் சொன்னதும் அப்பூதி அடிகளுக்குக் கோபம் வந்தது; நீர் யார்?' என்று கேட்டார்: வந்தவர் திருநாவுக்கரசர் என்பதை அறிந்தார்; அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார்: கும்பிட்டார்; தம் வீட்டில் விருந்து உண்ணுமாறு கேட்டுக் கொண்டார். அப்பரும் இசைந்தார். சிறந்த முறையில் விருந்து தயாரிக்கப்பட்டது. அப்பூதி அடிகளின் மூத்த மகனின் பெயர் மூத்த திருநாவுக்கரசு. அவன் வாழைக்குருத்து அரிந்துவரத் தோட்டத்துக்குச் சென்ருன். வாழையிலையை அரியும்பொழுது அவனைப் பாம்பு கடித்தது. இலையுடன் ஓடிவந்து இறந்தான். பெற்ருேர்கள் அவன் இறந்ததை மறைத்தார்கள். அப்பரை அமுது உண்ண அழைத் தார்கள். அப்பர் உட்கார்ந்தார்; திருநீறு அணிந்து கொண்டார்; அப்பூதி அடிகளாருக்குத் திருநீறு அளித்தார்; ' மூத்த மகனே அழை" என்று கூறினர்: “ இப்போது இங்கு அவன் உதவான்' என்ருர் அப்பூதி. இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று நினைத்த அப்பர். நடந்தண்தக் கேட்டு அறிந்தார்; உடலைக் கோயிலுக்கு எதிரே கொண்டுவரச் செய்தார்: “ஒன்று கொலாம்'