பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ6 என்ற பதிகம் பாடினர். இறந்தவன் உயிர்பெற்று எழுந்தான். அப்பரும் விருந்து உண்டார்; திருப்பழனம் என்ற தலத்துக்குச் சென்ருர், அப்பூதி அடிகளின் தொண்டைச் சிறப்பித்துப் பாடினர். பின்னர், பல தலங்களையும் தரிசனம் செய்துகொண்டு திருப்புகலூர் என்ற தலத்துக்குச் சென்ருர். அங்கே முருக நாயனுர் என்பவர் அப்பரை உபசரித்தார். அங்கிருந்து அப்பர் திருவீழி மிழலைக்குச் சென்ருர். சம்பந்த குடன் இருந்து இறைவன் இடம் படிக்காசு பெற்ருர், அங்கே பஞ்சத்தைப் போக்கினர்; பின்னர்த் திருமறைக் காட்டுக்குச் சம் பந்தருடன் சென்ருர். அங்கே பல காலம் திறவாது கோயில் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தன. சம்பந்தர் திருநாவுக் கரசரைப் பார்த்து, 'அப்பரே! கதவுகள் திறக்குமாறு பாடுங்கள்' என்று வேண்டினர். அப்பரும் பண்ணின் நேர்மொழியாள்' என்று தொடங்கிப் பாடினர். பாடி முடித்ததும் கதவுகள் திறந்தன. 華 சம்பந்தர் கதவுகளை அடைக்கப் பாடினர்; இறைவனை வழி பட்டார்கள். சில நாள்கள் அங்கேயே இருந்தார்கள். சம்பந்தர் பாண்டி நாடு நோக்கிச் சென்ருர். அப்பர் திருப்பழையாறை என்ற தலத்துக்குச் சென்ருர். அவ்வூரில் இருந்த சிவன் கோயிலைச் சமணர்கள் தம் சமயக் கோயிலாக மாற்றி விட்டார்கள். இதை அறிந்தார் அப்பர்: “இக் கோயிலை மீண்டும் சிவன் கோயிலாக மாற்றில்ை ஒழிய உணவு உண்ண மாட்டேன்' என்று அங்கேயே இருந்தார். அப்பரது (சத்தியாக்கிரகச் செயலைச் சோழ அரசன் அறிந்தான்; அப்பரிடம் வந்தான்; உண்மையை அறிந்தான்; மறு படியும் அக் கோயிலைச் சிவன் கோயிலாக மாற்றிஞன். அப்பரும் பாடி வ ழிபட் டார். அப்பர் பிறகு திருப்பைஞ்ஞ்லி என்ற தலத்தை நோக்கிப் போய்க்கொண்டு இருந்தார். அப்பருக்குப் அதிகப் பசியும் தாகமும் ஏற்பட்டது. சிவபெருமான் சைவ அந்தணர் உருவம் எடுத்தார்; சோறும் நீரும் கொண்டுவந்து அப்பருக்குக் கொடுத் தார். அப்பரும் உண்டு இளைப்பாறினர்: சைவ அந்தணரும் அப்பரும் திருப்பைஞ்ஞ்லியை நோக்கிச் சென்ருர்கள். ஊர் அடைந்ததும் உடன் வந்தவர் மறைந்தார்.