பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 பிறகு பல தலங்களையும் தரிசனம் செய்துகொண்டு, தமிழ் நாட்டின் வட எல்லையில் இருந்த திருக்காளத்திக்குச் சென்ருர். அங்கிருந்து திருக்கயிலையைத் தரிசிக்கப் புறப்பட்டார். இரவும் பகலும் நடந்தார்; கால்கள் தேய்ந்தன. கைகளால் தவழ்ந்தார், கைகளும் தேய்ந்தன; மார்பினுல் நகர்ந்தார், மார்பும் தேய்ந்தது. அப்பர் உறுதி தளராது மேற் சென்ருர், சிவபெருமான் அப்பர் முன் தோன்றிஞர்; அப்பரை நோக்கி, 'இங்கு ஏன் வந்தீர்?' என்று கேட்டார். - = = -- בד - Fo -- - "திருக்கயிலையில் இறைவனைக் காண்பதற்கு வந்தேன எனருா அப்பர். உம்மால் காண முடியாது; திரும்பிச் செல்லும்' என்ருர் வந்தவர். “இறைவனேக் கயிலையில் காணுமல் போனல், திரும்பிப் போகமாட்டேன்' என்ருர் அப்பர். வந்தவர் மறைந்தார். 'நாவுக்கரசனே! எழுந்திரு' என்று அசரீரி கேட்டது. நாவுக்கரசரும் உடல் உறுப்புக்கள் வரப்பெற்று எழுந்தார். இங்கு இருக்கிற குளத்தில் மூழ்கு திருவையாற்றுக்குச் செல்; அங்கே நம் கோலத்தைக் காணலாம்' என்று வாஞெலி கேட்டது. i. திருநாவுக்கரசரும் குளத்தில் மூழ்கினர்; திருவையாற்றில் ஒரு குளத்தில் கரை ஏறினர்; அங்கே எல்லாப் பொருள்களும் சிவபெருமானும் உமாதேவியும் ஆக இருக்கும் காட்சியைக் கண்டார்; மாதர்ப் பிறைக் கண்ணியான’ என்ற பதிகம் பாடித் து தித் தா 斤。 திருவையாற்றுக்கு அருகில் திருப்பூந்துருத்தி என்ற தலம் இருக்கிறது. அத் தலத்துக்கு அப்பர் சென்ருர். "தலையே நீ வனங்காய் என்று பதிகம் பாடினர். அங்கே ஒரு மடம் கட்டினும் அங்கேயே தங்கியிருந்தார். பாண்டிய நாட்டில் வெற்றிக்கொடி நாட்டித் திரும்பி வந்த சம்பந்தரை வரவேற்ருர் .