பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 ஒம திருச்சிற்றம்பலம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறும் திருப்பாடல்களும் திருக்கயிலையில் சிவபெருமானின் நிழல் உருவில் தோன்றினர் ஒருவர். அவருக்கு ஆலாலசுந்தார் என்று பெயர். அவர் சிவ பெருமானுக்குத் தொண்டுகள் புரிந்து வந்தார். உமாதேவியாருக்கு இரண்டு சேடியர் இருந்தனர். அவர்கள் அநிந்திதை, கமலினி என்பவர் ஆவர். ஒருநாள் ஆலாலசுந்தரர் மலர்கள் கொய்துவர நந்தவனத் துக்குச் சென்ருர். அங்கே அநிந்திதை, கமலினி ஆகிய இருவரும் மலர் கொய்தற்கு வந்தார்கள். அவர்களே ஆலாலசுந்தரர் கண்டார் அன்பு கொண்டார். அவ்விருவரும் இவரிடம் அன்பு கொண்டனர். சிவபெருமான் இதனை உணர்ந்தார்; மூவரையும் நோக்கி, "நீங்கள் நில உலகத்துக்குச் சென்று, இல்லறம் நடத்தி, மறுபடியும் இங்கே வரலாம்' என்று அருள் செய்தார். ஆலாலசுந்தரர் வருந்தினர்: "இறைவா, என்னை உரிய காலத்தில் ஆட்கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இறைவனும் இனிதே இசைந்தார். தமிழ்நாட்டில் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூர் என்ற தலம் உண்டு. அவ்வூரில் ஆதி சைவர் குலத்தில் சடையவனுர் என் பவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி பெயர் இசை ஞானியார். இவ்விருவருக்கும் மகனக ஆலாலசுந்தரர் தோன்றினர். இக் குழந்தைக்கு நம்பி ஆரூார் என்று பெயர் இட்டார்கள். திருமுனைப்பாடி நாட்டை அந்நாளில் நாவிங்கமு?னயரையன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் குழந்தை நம்பி ஆரூரர் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்தார். அரசன் இவரைக் கண்டான்: பெற்றேரின் இசைவு பெற்று இவரைத் தன் அரண்மனேக்கு அழைத்துச் சென்ருன்; தன் குழந்தை போலவே