பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வளர்த்தான்; உரிய காலத்தில் பூணுால் அணிவித்தான்; எல்லாக் கலைகளையும் கற்கும்படி செய்தான். நம்பி ஆரூரரும் மணப்பருவம் அடைந்தார். திருநாவலூர்க்கு அருகில் புத்துனர் என்ற ஊர் உண்டு. அங்கே சடங்கவி சிவாசாரியார் என்ற ஆதிசைவர் ஒருவர் இருந்தார். அவர் மகளை நம்பி ஆரூரருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடு ஆயிற்று. திருமணநாள்; திருமணப் பந்தலில் சுந்தரர் ஆகிய நம்பி ஆரூரர் மணக்கோலத்துடன் இருந்தார். அப்போது சிவபெருமான் முதிய அந்தணர் வடிவம் எடுத்தார்; திருமணப் பந்தலுக்கு வந் தார்; அங்கே இருந்த எல்லாரையும் பார்த்தார்; அவர்களிடம், "இந்த நம்பி ஆரூரன் எனக்கு அடிமை; ஆகையால் இவன். எனக்குத் தொண்டு செய்ய வேண்டும்' என்று கூறினர். சுந்தரர் திகைத்தார்: “அந்தனர், அந்தணருக்கு அடிமை ஆவது எங்கும் இல்லையே! நீர் பித்தரோ?' என்று கோபத்துடன் கேட்டார். வந்த முதியவர் விடவில்லை. ஆகையால் சுந்தரர் அவரைப் பார்த்து, நீர் சொல்வது உண்மையானல் அதற்கு உரிய ஒலையைக் காட்ட வேண்டும்' என்ருர். உடனே முதியவர் ஒர் ஒலையைக் காட்டினர். சுந்தரர் அதைக் கிழித்து எறிந்தார். திருநாவலூருக்கு அருகில் திருவெண்ணெய் நல்லுனர் என்ற தலம் இருக்கிறது. இத் தலத்தில் அந்நாளில் வழக்கு மன்றம் ஒன்று இருந்தது. இம் மன்றத்தில் முதியவர் வழக்கு தொடுத்தார். சுந்தரரும் மற்றவர்களும் வழக்கு மன்றத்துக்குச் சென்ருர்கள்; வழக்கு மன்றத்தில் முதியவர், 'சுந்தரர் கிழித்தது படிஒலே மூல ஒலை (original) என்னிடம் இருக்கிறது' என்று கூறி, வேறு ஒர் ஒலையைக் காட்டினர். 'அவ் வோலேயில் குறித்துள்ளபடி சுந்தரர் முதியவருக்கு அடிமை செய்ய வேண்டும்' என்று தீர்ப்புக் கூறிஞர்கள். பிறகு அம்முதியவரை, உம் இருப்பிடம் யாது?’’ என்று கேட்டார்கள். அம் முதியவர். 'என் இருப்பிடம் யாருக்குமே தெரியாதா?' என்று கேட்டு, 'என் பின்னே வாருங்கள்' என்று கூறிஞர்; கோயிலை நோக்கிச் சென்ருர், உள்ளே சென்றதும் மறைந்து விட்டார். முதியவராக வந்தவர் இறைவனே என்று எல்லோரும் அறிந்தார்கள்.