பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 சுந்தரர் தம் செயலுக்கு வருந்தினர். அப்பொழுது இவ பெருமான் அசரீரியாகச், 'சுந்தரனே! நம்மிடம் நீ வன்மையாகப் பேசிய்ை; ஆகையால் இன்று முதல் வன்தொண்டன் என்று அழைக்கப்படுவாய் எனக்கு அருச்சனை பாட்டே ஆகும்; ஆகவே நீ என் மேல் பாடுவாயாக' என்ருர், "நான் உம்மை எங்ங்னம் பாடுவேன்?' என்ருர் சுந்தார். 'நீ எம்மைப் பித்தா!' என்று ஏசிய்ை அல்லவா? அதனல் பித்தா என்றே தொடங்கிப் பாடுக” என்ருர் சிவபெருமான். அவ் வாறே சுந்தரரும் பித்தா பிறை சூடி" என்று தொடங்கிப் பதிகம் பாடினர். பிறகு சுந்தரர் இறைவனது ஆணையின்படி தலப்பயணம் தொடங்கித் திருவதிகை என்ற தலத்துக்கு வந்தார்: "திருவதிகை திருநாவுக்கரசர் தொண்டு செய்த தலம்; இதைக் காலால் மிதிக்க கூடாது' என்று நினைத்தார்; அத் தலத்தை வலம் வந்தார்; அருகில் உள்ள சித்த வடமடம் என்ற இடத்தில் தங்கினர்; இரவு வந்ததும் உறங்கினர். சிவபெருமான் அங்கே வந்தார்; படுத்தார்; சுந்தரர் தலையின் மேல் தம் காலை வைத்தார். சுந்தரர் வேறு ஒரு பக்கத்தில் தலே வைத்துப் படுத்தார். வந்தவர் அந்த இடத்துக்குப் போளுர்: மறுபடியும் சுந்தரர் தலையில் தம் காலை வைத்தார். சுந்தரர் சினம் கொண்டார்; வந்தவரும் மறைந்தார். தம் தலையின் மேல் கால் வைத்தவர் சிவபெருமானே என்பதைச் சுந்தரர் அறிந்தார். 'தம்மானை அறியாத' என்ற திருப்பதிகம் பாடி வழிபட்டார். பிறகு சுந்தரர் சிதம்பரத்துக்குச் சென் ருர்; அங்கே நடராசப் பெருமானை வணங்கினர். அப்பொழுது "திருவாரூருக்கு து.ா என்று விண் ஒலி கேட்டது. சுந்தரரும் திருவாரூரை நோக்கிப் புறப்பட்டார்; வழியில் சீர்காழிக்கு வந்தார். "சிர்காழி சம்பந்தர் பிறந்த தலம்; ஆகையால் அதை மிதிக்கக் கூடாது' என்று சுந்தரர் நினைத்தார்; அதை வலமாக வந்தார்; "சாதலும் பிறத்தலும்' என்ற பதிகம் பாடினர். திருக்கோலக்கா முதலிய தலங்களுக்குச் சென்ார்: திரு வாரூரை நெருங்கினர். இறைவன் ஏவலால் திருவாரூரில் உள்ள சிவனடியார்கள் சுந்தரரை வரவேற்ருர்கள். இறைவன் திரு வருளால் ஒரு விண் ஒலி கேட்டது, அதன்படி சுந்தரருக்குத் தம்பிசான் தோழர் என்று பெயர் வந்தது.