பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருக்கயிலையில் சுந்தரரைக் கண்ட சேடியர் இருவரில் அதிந்திதையார் ஒருவர். இவர் ஞாயிறு என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தார்; சங்கிலியார் என்று பெயர் இடப்பெற்ருர், இவர் திருவொற்றியூரில் நாள்தோறும் சிவபெருமான் கோயிலில் திருத்தொண்டு புரிந்து வந்தார். ஒருநாள் சுந்தரர் சங்கிலியாரைக் கண்டார்; மனம் பறி கொடுத்தார்; அவரைத் தமக்கு மணம் செய்விக்குமாறு இறைவனை வேண்டினர். சங்கிலியாரும், சுந்தரர் தம்மைப் பிரியாது இருக்கு மாறு உறுதிமொழி கொடுத்தால், மணம் செய்து கொள்வதாகக் கூறினர். சுந்தரரும் மகிழமரத்து அடியில் உறுதி கூறினர். திருமணம் நடந்தது; சில காலம் கழிந்தது. சுந்தரருக்குத் திருவாரூர்ப் பெருமான் நினைவு வந்தது; உடனே திருவாரூருக்குப் புறப்பட்டார்; தாம் கொடுத்த உறுதிமொழியை மறந்தார். உறுதிமொழி தவறியதால் சுந்தரர் தம் இரு கண்களையும் இழந்தார்; திருவெண்பாக்கம் என்ற ஊரை அடைந்தார்: 'இறைவனே! கோயிலில் இருக்கிறீரோ?' என்று பாடினர். இறைவனும், "உளோம் போர்ே' என்று கூறி, ஒர் ஊன்று கோலைச் சுந்தரருக்கு உதவினர். அங்கிருந்து சுந்தரர் காஞ்சி புரத்தை அடைந்தார்; 'ஆலந்தான் உகந்து’ என்ற பதிகம் பாடினர்; இடக்கண்ணைப் பெற்ருர். வழியில் திருத்துருந்தி என்ற தலத்துக்கு வந்தார்; அங்குக் குளத்தில் மூழ்கினர்; அவர்தம் உடலில் இருந்த நோய் நீங்கியது. திருவாரூரை அடைந்த சுந்தர ர், பெருமான் மீது 'மீளா அடிமை' என்ற பதிகம் பாடினர்; வலக்கண் ஒளியும் வந்தது. சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்த செய்தி பரவையாருக்குத் தெரிந்தது. அதனுல் பரவையார் ஊடல் கொண்டார். பரவையாருடைய ஊடலைத் தீர்க்கச் சிவபெருமான் நள்ளிரவில் இருமுறை துரது சென் முர். பரவையார் ஊடல் தீர்த் தார். இருவரும் இணைந்தனர். சிவபெருமானத் துாதாக ஏவிய செய்தியை ஏயர்கோன் கலிக் காமர் என்ற ஒர் அன்பர் கேள்விப்பட்டார்; சுந்தரர் பேரில் சினங் கொண்டார். சிவபெருமான் இவ்விருவரையும் இணைக்க வேண்டும் என்று கருதினர் ஏயர்கோனுக்குச் சூலை நோய் வரச் செய்தார்;