பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 அதனை நீர்க்கச் சுந்தரரை ஏவினர். சுந்தரர் வருவதை ஏயர்கோன் கேட்டார்: "சுந்தரர் வருவதற்கு முன் நானே இறப்பேன்’ என்று கூறினர்; உடைவாளால் தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்தார். சுந்தரர் வந்தார்: நடந்ததை அறிந்தார்; அதே உடைவாளால் தம்முடைய உயிரைப் போக்கிக்கொள்ள வாளே எடுத்தார். இறைவன் சுந்தரரைத் தடுத்தார்; ஏயர்கோனை உயிர் பெற்று எழுமாறு செய்தார்; இருவரையும் நண்பர் ஆக்கினர். தென் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியைச் சேர நாடு என்பார்கள். அச் சேரநாட்டின் தலைநகரம் மகோதை என்பதாகும். அந்நாளில் சேர அரசராக இருந்தவர் சோமான் பெருமாள் என்ற சிவபக்தர். அவர் நாள்தோறும் சிவபூசை செய்வார். சிவபூசையின் முடிவில் நடராசப் பெருமானின் சிலம் பொலி கேட்கும். ஒருநாள் சிலம்பொலி கேட்கவில்லை. சேரமான் வருந்தினர். இறைவன் உருவிலியாக, 'அரசனே! கவலை வேண் டாம்; நம் அடியவன் சுந்தரன் நம்மைப் பாடிக் கொண்டு இருந் தான்: அதில் மயங்கி இருந்தோம்' என்று கூறினர். இதைக் கேட்டதும் சேரமான் பெருமாள், 'நடராசப் பெருமானைத் தரிசிக்க வேண்டும்;.சுந்தரரைக் காணவேண்டும்' என்று விரும் பினர்; சிதம்பரத்துக்கு வந்தார்; நடராசப் பெருமானத் தரிசித் தார்; 'பொன் வண்ணத்து அந்தாதி' என்ற நூலைப் பாடினர்: திருவாரூருக்கு வந்தார்: "திருவாரூர் மும்மணிக் கோவை' என்ற நூலைப் பாடினர். சுந்தரரோடு சில நாட்கள் தங்கியிருந்தார். பிறகு மதுரை, திருப்பாங்குன்றம் முதலிய தலங்களுக்குச் சென்று திரும்பினர். அப்பொழுது இருவரும் திருவையாற்றுக்கு வருவார் ஆயினர். காவிரி கரைபுரண்டு ஓடியது. சுந்தரர் 'பாவும் பரிசொன்று' என்றபதிகம் பாடினர். காவிரி இவர்களுக்கு வழிவிட்டது. பின்னர் இருவரும் சேரநாட்டுக்குச் சென்றனர். சேரமான் பெருமாளுடன் சுந்தரர் சிலநாள் தங்கி இருந்தார்; பிரியா விடைபெற்றுத் திருவாரூருக்குத் திரும்பிஞர். அப்பொழுது சேரமான் சுந்தரருக்கு மணியும் பொன்னும் கொடுத்து வழி அனுப்பினர். சுந்தரர் திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு அருகில் வந்துகொண்டு இருந்தார். சிவபெருமான் ஏவலால் பூதங்கள் வேடர் வடிவில் வந்தன. அப்பொருள்களை எல்லாம் கொள்ளை இட்டன. சுந்தரர் கோயிலுக்குச் சென்ருர்: “கொடுகு